தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Audio Launch: கெட் ரெடி தலைவர் ரசிகர்களே.. ஜெயிலர் ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு

Jailer Audio Launch: கெட் ரெடி தலைவர் ரசிகர்களே.. ஜெயிலர் ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு

Aarthi V HT Tamil

Jul 22, 2023, 11:25 AM IST

ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும், படம் ஜெயிலர். இந்தப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.

படத்தின் முதல் பாடலான 'காவாலா' எனத் தொடங்கும் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல், ‘ஹூக்கும்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ஹிட்டனது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன் படி, வரும் 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிட்டு உள்ளது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயிலர் படம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகி வரும் அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி