தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naaisekarreturns Rights: நாய் சேகர் ரிட்டன்ஸ்:Ott மற்றும் Tv உரிமம் இவர்களுக்கே!

NaaiSekarReturns rights: நாய் சேகர் ரிட்டன்ஸ்:OTT மற்றும் TV உரிமம் இவர்களுக்கே!

Nov 29, 2022, 08:03 PM IST

நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு படம் வெளிவரவிருப்பதால், தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட் என அனைத்து விற்பனையும் பெரிய அளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. (Lyca Productions Twitter)
நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு படம் வெளிவரவிருப்பதால், தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட் என அனைத்து விற்பனையும் பெரிய அளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு படம் வெளிவரவிருப்பதால், தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட் என அனைத்து விற்பனையும் பெரிய அளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

‘எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க… எனக்கு எண்டே இல்லடா…’ என , மீண்டும் முழுநீள ஹீரோவாக நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு களமிறங்கும் படம் தான், நாய் சேகர் ரிட்டன்ஸ்.

ட்ரெண்டிங் செய்திகள்

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

HBD K. Jamuna Rani: 6,000 பாடல்கள் பாடியவர்.. பல ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஜமுனா ராணி பிறந்த நாள்

Tamannaah Bhatia: படுக்கையறை காட்சியில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. காரணத்தை விளக்கிய தமன்னா

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

நாய் சேகர் டைட்டில் பெயரில் தொடங்கிய பிரச்னை, அதன் பின் அது ஒத்துவராமல் போக, நாய் சேகர் ரிட்டன்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, லண்டன் உள்ளிட்ட நகரில் பிரம்மாண்டமாக ஷூட் செய்யப்பட்டது நாய் சேகர் ரிட்டன்ஸ்.

காமெடி படங்களை திறன்பட கையாளும் சூரஜ் இயக்கத்தில், வடிவேலு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கும் நாய் சேகர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஏற்கனவே நாய் சேகர் ரிட்டனஸ் படத்தின் இரு பாடல்கள் வெளியாகி, ஏகோபித்த ஆதரவை பெற்றது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வடிவேலு பாடியிருப்பது, இப்படத்தின் மற்றொரு சிறப்பு.

பொன்னியின் செல்வன் மெகா வெற்றிக்குப் பின் லைகா நிறுவனம் வெளியிடும் இரண்டாவது திரைப்படம் என்பதால், இந்த படம் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

முழுநீள நகைச்சுவை திரைப்படமாக, சூரஜ்-வடிவேலு கூட்டணியில் வெளிவர இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம், டிசம்பர் மாதம் 9ம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அதற்கான விற்பனை கிட்டத்தட்ட முடிந்த நிலையில், படம் வெளியாகும் முன்பே, நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி விற்பனை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதே போல நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ஓடிடி உரிமத்தை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா, சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு படம் வெளிவரவிருப்பதால், தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட் என அனைத்து விற்பனையும் பெரிய அளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வைகைப்புயலை காண, இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து தளங்களில் அவர் மகிழ்விக்க வரவிருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி