தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sakshi Dhoni: தோனி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருக்கா? - கண்டிஷன் போட்டு பதில் சொன்ன சாக்‌ஷி தோனி!

Sakshi Dhoni: தோனி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருக்கா? - கண்டிஷன் போட்டு பதில் சொன்ன சாக்‌ஷி தோனி!

Jul 26, 2023, 11:27 AM IST

எம்.எஸ்.தோனி திரைப்படங்களில் நடிப்பாரா என்பதற்கு அவரது மனைவி சாக்‌ஷி தோனி பதிலளித்திருக்கிறார்.
எம்.எஸ்.தோனி திரைப்படங்களில் நடிப்பாரா என்பதற்கு அவரது மனைவி சாக்‌ஷி தோனி பதிலளித்திருக்கிறார்.

எம்.எஸ்.தோனி திரைப்படங்களில் நடிப்பாரா என்பதற்கு அவரது மனைவி சாக்‌ஷி தோனி பதிலளித்திருக்கிறார்.

தோனி தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம்  ‘Let's Get Married’. இந்தப்படத்தை இயக்குநர் ரமேஷ் திலகமணி இயக்கி இருக்கிறார். ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நடிகை நதியா, யோகிபாபு, மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்தப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் சார்ந்த புரோமோஷன் பணிகள் படுவேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. களத்தில் தோனியின் மனைவி சாக்‌ஷியே இறங்கி படக்குழுவுடன் இணைந்து படத்தை புரோமோட் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சாக்‌ஷியிடம் தோனி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ நல்ல கதையாக இருக்கும் பட்சத்தில் தோனி நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு கேமரா கூச்சமெல்லாம் கிடையாது. 2006ம் ஆண்டிலிருந்து அவர் விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு கேமரா பயமெல்லாம் கிடையாது. ஆகையால் ஏதாவது நல்லதாக வந்தால் செய்யலாம். அவருக்கு ஆக்‌ஷன் படங்கள்தான் செட்டாகும். ஒரு வேளை தோனி கதாநாயகனாக அறிமுகமானால் நிச்சயம் அந்தத்திரைப்படம் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும். நல்லக்கதை மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படமாக அந்தப்படம் இருக்குமென்றால் தோனி அந்தப்படத்தில் நடிப்பதை பற்றி யோசிப்பார்” என்று பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் ரமேஷ் திலகமணி, “ தோனி நிஜ ஹீரோ. ஆகையால் நான் அவரை சூப்பர் ஹூரோ ஜானர் திரைப்படங்களில் பார்க்க விரும்புகிறேன்” என்று பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி