தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Markantony Review: ‘ஹீரோ விஷால் தான்.. ஆனா ஹீரோ எஸ்.ஜே.சூர்யா’ மார்க் ஆண்டனி விமர்சனம்!

MarkAntony Review: ‘ஹீரோ விஷால் தான்.. ஆனா ஹீரோ எஸ்.ஜே.சூர்யா’ மார்க் ஆண்டனி விமர்சனம்!

Sep 15, 2023, 11:41 AM IST

Mark Antony Movie Review: ‘எஸ். ஜே. சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார் சூர்யா’
Mark Antony Movie Review: ‘எஸ். ஜே. சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார் சூர்யா’

Mark Antony Movie Review: ‘எஸ். ஜே. சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார் சூர்யா’

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் காட்சி முடிந்த கையோடு சுடச்சுட முதல் விமர்சனத்தை வழங்குகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ். 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஏ ஏ ஏ, பகீரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். பல்வேறு விமர்சனங்களை தாண்டி, தடைகளை தாண்டி வெளி வந்திருக்கும் மார்க் ஆண்டனி, எப்படிப் பட்ட படம்?

கதையின் கரு:

தன்னுடைய அப்பாதான் அம்மாவை கொன்றார் என்றும் அவர் மிகவும் மோசமானவர் என்றும் வாழ்ந்து வரும் மார்க், ஜாக்கி பாண்டியனை அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். இந்த நிலையில் அவன் கையில் டைம் டிராவல் மிஷின் கிடைக்கிறது. 

அந்த மிஷின் மூலம் தன்னுடைய அப்பா மிகவும் நல்லவர் என்றும் ஜாக்கி பாண்டியன் தான் அவரை கொன்று அவரை பற்றி சமுதாயத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மார்க் ஆண்டனி படத்தின் கதை!

விஷால், எஸ். ஜே. சூர்யா ஆகிய இருவரை சுற்றி தான் முழு கதையும் நகர்கிறது. இருவருக்கும் அப்பா , மகன் என இருவேறு தோற்றங்கள். 

வழக்கம் போல ஆக்ஷனிலும், நடிப்பிலும் விஷால் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் நம்பும் படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எஸ். ஜே. சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார். 

திறமை வாய்ந்த ஒரு கலைஞனுக்கு அதனை வெளிப்படுத்த சரியான களத்தை மட்டும் உருவாக்கி கொடுத்தால் போதும். மீதி வேலையை அவன் பார்த்துக் கொள்வான் என்பதற்கு இந்தப்படம் மற்றுமொரு உதாரணம்.

ஒரு சின்ன ஸ்பேஸ், சின்ன டயலாக் கிடைத்தால் கூட போதும், அந்த மொத்த சீனையே தன் பக்கம் இழுத்து திரையரங்கேயே ஆர்ப்பரிக்க வைத்து விடுகிறார் சூர்யா. இதர கதாபாத்திரங்களும் கதைக்கு நியாயம் செய்திருக்கின்றன.  ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் அவ்வப்போது காமெடி செய்கிறார்கள். 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் படத்தை எந்த தோய்வும் இல்லாமல் கொண்டு சென்று இருக்கிறார். வசனங்களில் அனல் தெறிக்கிறது. 

ஆக்சன் காட்சிகளில் பழைய பாடல்களை பின்னணியாக வைத்தது இயக்குநர் லோகேஷ் படங்களை நியாபகப்படுத்தியது. ஜிவி பிரகாஷ் குமார் பின்னணி இசை மிரட்டல்.  அதிரனும்டா பாடல் துள்ளல். 

விஷாலின் டப்பிங் மட்டும் சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. செல்வராகவனுக்கு பெரிதாக ரோல் இல்லாதது ஏமாற்றம். மற்றபடி திரைப்படம் வீக்கெண்டுக்கு மஸ்ட் வாட்ச் மக்களே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி