தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maamannan Update: வடிவேலு பாடிய பாடல் எப்போது வெளியீடு?

Maamannan Update: வடிவேலு பாடிய பாடல் எப்போது வெளியீடு?

Aarthi V HT Tamil

May 17, 2023, 10:44 AM IST

மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய பாடலின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய பாடலின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய பாடலின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு மாமன்னன் படத்தில் பாடிய பாடல் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி முதல் பாடல் வரும் மே 19 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “மாமன்னன் படத்திற்காக ‘வைகைப்புயல்’ வடிவேலு குரலில் ஒரு பாடலை பதிவு செய்தோம். பாடல் பதிவின் போது எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்து மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கிக் கொடுத்தார் வடிவேலு” என்று பதிவிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி