தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chandramuki 2: இரண்டு மாதம் தூக்கம் இல்லை - சந்திரமுகி 2வால் புலம்பும் கீரவாணி

Chandramuki 2: இரண்டு மாதம் தூக்கம் இல்லை - சந்திரமுகி 2வால் புலம்பும் கீரவாணி

Aarthi V HT Tamil

Jul 24, 2023, 10:30 AM IST

சந்திரமுகி 2 பட அப்டேட்டை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வெளியிட்டு உள்ளார்.
சந்திரமுகி 2 பட அப்டேட்டை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வெளியிட்டு உள்ளார்.

சந்திரமுகி 2 பட அப்டேட்டை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வெளியிட்டு உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா மற்றும் நயன்தாரா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, சந்திரமுகி 2 உருவாகி உள்ளது. அப்போது கதாநாயகனாக ரஜினிகாந்த் நடிக்க ரூ 40 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவிமரியா, சுரேஷ் மேனன், டி.எம்.கார்த்திக், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் அல்லிராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பின்னணி இசை மற்றும் இசையை எம்.எம்.கீரவாணி அமைத்துள்ளார். சந்திருகி 2 படத்தின் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவை ஆண்டனி மற்றும் ஆர்.டி.ராஜசேகர் கவனித்துள்ளனர்.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “சந்திரமுகி 2 படம் பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். எனக்கு 2 மாதங்கள் தூக்கமில்லாமல் இரவும் பகலும் என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளில் வாழ்க்கையை அழகாக மாற்றி இருக்கிற்றேன். குருகிரண் & என் நண்பர் வித்யாசாகருக்கு நல்வாழ்த்துக்கள் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரமுகி 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹாரர் மற்றும் ஆக்சன் ஜானர் என்டர்டெய்னராக உள்ள இந்த படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி