தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seenu Ramasamy On Vijay: நடிகர் விஜய்யிடம் சீனு ராமசாமி என்ன கோரிக்கை வச்சுருக்கார் பாருங்க

Seenu Ramasamy on Vijay: நடிகர் விஜய்யிடம் சீனு ராமசாமி என்ன கோரிக்கை வச்சுருக்கார் பாருங்க

Jun 19, 2023, 10:41 AM IST

Seenu Ramasamy: சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்.
Seenu Ramasamy: சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்.

Seenu Ramasamy: சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்.

2023ம் நடந்து முடிந்த 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியரை தேர்வு செய்து நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழ் சினிமாவில் பல முக்கிய பிரபலங்கள் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சீனுராம சாமி விஜய்யை வாழ்த்தியதோடு ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதில் கூறியிருப்பதாவது.,

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

"கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' இளைய தளபதி @actorvijay உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்வுதான் நேற்று தமிழ்நாடு முழுவதும் சென்சேஷன். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எங்கு பார்த்தாலும் விஜயும், விஜயின் ரியாக்‌ஷன்களுமே சர்வமையமாக இருக்கின்றன.

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விழாவில் அவ்வளவு நேரமும் மேடையிலேயே நின்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஜய் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அசுரன் படத்தின் கிளைமேக்சில் தனுஷ் பேசிய, “நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுக ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுக. ஆனா படிப்ப மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்ற வசனம் என்னை மிகவும் பாதித்து விட்டது. கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது.” என்று பேசினார்.

இந்நிலையில் விஜய்யின் இந்த நடவடிக்கைதான் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபெருளாக மாறி உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் சினு ராமசாமி விஜய் மாணவர்களுக்கு உதவிய விஜய்யின் நடவடிக்கைகளை பாராட்டியதோடு சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி