தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  A R Rahman Studio: ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் விபத்து - லைட் மேன் பலி

A R Rahman studio: ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் விபத்து - லைட் மேன் பலி

Aarthi V HT Tamil

Jan 19, 2023, 02:20 PM IST

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட் மேன் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட் மேன் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட் மேன் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக விபத்துகள் அதிகமாக நடந்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்களிலும், ஸ்டூடியோக்களிலும் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. 

ட்ரெண்டிங் செய்திகள்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! - வெங்கடேஷ் பட் பளார்

Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் ஸ்டுடியோவில் ஒரு விபத்து நடைபெற்று உள்ளது.

சென்னை திருவள்ளூர் பகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டியில் ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டி அமைந்து உள்ளது. இந்த ஸ்டுடியோவில் படப்பிடிப்பு, பின்னணி இசை, இசையமைப்பு உள்ளிட்டவை நடப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று ( ஜனவரி 18 ) நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பு குழுவில் லைட் மேன் குமார் என்பவர் படப்பிடிப்புக்காக உயரத்தில் விளக்குகளை மாட்டிக் கொண்டு இருந்தார்.

 லைட் மேன் குமார் 40 அடியில் மின் விளக்குகளை பொருத்தும் போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனையடுத்து அவரை பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

வழியில் இறந்து விடத்தாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்தி வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் பிலிம் சிட்டியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி அனைவரும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

லைட் மேன் மரணம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஸ்டுடியோவில் விபத்து எப்படி நடந்தது? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபகாலமாக தொடர் படங்களில் பிஸியாக இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான விக்ரம் கோப்ரா மற்றும் லைஃப் ஆஃப் முத்து, பொன்னியன் செல்வன்  போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இன்னும் இரண்டு வருடங்கள் பிஸியாக இருக்கப் போகிறார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி