தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Interval Block: “8 நிமிட இடைவேளை.. தியேட்டர் தெறிக்கும்..” - லியோ படம் குறித்து புல்லரிக்கப் பேசிய லியோ லலித்!

Leo Interval Block: “8 நிமிட இடைவேளை.. தியேட்டர் தெறிக்கும்..” - லியோ படம் குறித்து புல்லரிக்கப் பேசிய லியோ லலித்!

Aug 22, 2023, 12:09 PM IST

லியோ படத்தின் தயாரிப்பாளர் படத்தின் இடைவேளை காட்சி குறித்து பேசியிருக்கிறார்.
லியோ படத்தின் தயாரிப்பாளர் படத்தின் இடைவேளை காட்சி குறித்து பேசியிருக்கிறார்.

லியோ படத்தின் தயாரிப்பாளர் படத்தின் இடைவேளை காட்சி குறித்து பேசியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் திரைப்படம், லியோ. இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இருப்பினும் மீண்டும் காஷ்மீர் பறந்த படக்குழு, இன்னும் சில காட்சிகளை எடுத்து இருக்கின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

சஞ்சய் தத்தின் பிறந்தநாளன்று படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அர்ஜூனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அதுவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத்திரைப்படம் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்தப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேசியிருக்கிறார்.

லலித்குமார் பேசும் போது, “ படம் செய்யலாம் என்று முடிவு எடுத்த உடன் லோகேஷூம் மாஸ்டர் படக்குழுவே மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என்று பிரியப்பட்டார். அப்படித்தான் நாங்கள் ஒன்றாக இணைந்தோம். லியோ திரைப்படம் விஜய் சாரின் கேரியரில் சிறந்த திரைப்படமாக இருக்கும். 

இந்தப்படத்தின் வசூலை பிரேக் செய்வதற்கு இன்னொரு திரைப்படம் எப்படி வரப்போகிறது என்று தெரியவில்லை. இன்று வரை மாஸ்டர் அந்த இடத்தில் இருக்கிறது. அதைத்தாண்டுகிற திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கும். இந்தப்படத்தின் இடைவேளை கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் வருகிறது. அதை நாங்கள் பார்த்த போது, எங்களுக்கு புல்லரித்து விட்டது. நிச்சயமாக இந்தத்திரைப்படம் தியேட்டரில் ரசிகர்களால் கொண்டாடப்படும்”என்று பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி