தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kgf Fame Krishna G.rao: கேஜிஎஃப் நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார்

Kgf fame krishna g.rao: கேஜிஎஃப் நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார்

Aarthi V HT Tamil

Dec 08, 2022, 09:43 AM IST

தீராத நோயால் அவதிப்பட்டு வந்த கேஜிஎஃப் பட நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார்.
தீராத நோயால் அவதிப்பட்டு வந்த கேஜிஎஃப் பட நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார்.

தீராத நோயால் அவதிப்பட்டு வந்த கேஜிஎஃப் பட நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார்.

கன்னட நடிகர் யஷ் நடித்த கே.ஜி.எப் 1 மற்றும் 2 ஆவது பாகங்களில் கண் தெரியாத முதியவராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கிருஷ்ணா ஜி.ராவ். பெங்களூருவில் வசித்து வந்த இவர் வயோதிகம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

HBD K. Jamuna Rani: 6,000 பாடல்கள் பாடியவர்.. பல ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஜமுனா ராணி பிறந்த நாள்

Tamannaah Bhatia: படுக்கையறை காட்சியில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. காரணத்தை விளக்கிய தமன்னா

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

இதனால் அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக பெங்களூரு சீதா சர்க்கிள் அருகே உள்ள விநாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

கிருஷ்ணா கடந்த 30 ஆண்டுகளாக கன்னட திரையுலகில் பணியாற்றி வருகிறார். ஆனால் கே.ஜி.எப் படத்திற்கு பிறகு தான் பிரபலமடைந்து இருக்கிறார். அவர் கன்னடத்தில் நாமோ நாராயணா என்ற படத்திலும் நடித்து இருந்தார். அப்படம் வெளியாகும் முன்பே அவர் உயிரிழந்து விட்டார்.

கிருஷ்ணா ஜி.ராவ் மறைவுக்கு நடிகர் யாஷ் உள்பட கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி