தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan: ‘40 வருஷ நட்புடே.. பாக்காம போயிருவேனா..’மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோரை சந்தித்த கமல்ஹாசன்.. யார் இவர்?

Kamal Haasan: ‘40 வருஷ நட்புடே.. பாக்காம போயிருவேனா..’மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோரை சந்தித்த கமல்ஹாசன்.. யார் இவர்?

Jul 26, 2023, 12:02 PM IST

நடிகர் கமல்ஹாசன் புகழ்பெற்ற மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோரை சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசன் புகழ்பெற்ற மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோரை சந்தித்தார்.

நடிகர் கமல்ஹாசன் புகழ்பெற்ற மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோரை சந்தித்தார்.

இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898AD’. முன்னதாக இந்தப்படத்திற்கு ‘ப்ராஜெக்ட் கே’ என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தத்திரைப்படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகி வரும் இந்தத்திரைப்படத்தை ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தை எடுத்த நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

நெடுநாட்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து படக்குழு அந்த போஸ்டரில் சில மாற்றங்களை செய்து மீண்டும் வெளியிட்டது.

இதனிடையே அமெரிக்க நாட்டின் சான் டியாகோ நகரில் நடைபெற்ற காமிக் - கான் இன்டர்நேஷனல் விழாவில் ப்ராஜெக்ட் கே என்றால் என்ன, படம் எப்போது வெளியாகும் உள்ளிட்டவற்றிற்கான அப்டேட்கள் வெளியிடப்பட்டன. அது தொடர்பாக வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த அமெரிக்க நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் நடிகர் இந்த பயணத்தின் போது நடிகர் கமல்ஹாசன் ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார். அப்போது கமல்ஹாசன் இருவரின் 40 ஆண்டு கால நட்பை நினைவு கூர்ந்து, அவருடனான தொழில் பயணம் குறித்தும் கலந்துரையாடினார்.

வெஸ்ட்மோர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' மற்றும் 'தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி