தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kajol: பழிக்கு பழியாக லிப்-லாக் முத்தம்! 20 ஆண்டு பாலிசியை காற்றில் பறக்க விட்ட கஜோல்! அதுவும் கணவர் படத்திலே இப்படியா?

Kajol: பழிக்கு பழியாக லிப்-லாக் முத்தம்! 20 ஆண்டு பாலிசியை காற்றில் பறக்க விட்ட கஜோல்! அதுவும் கணவர் படத்திலே இப்படியா?

Jul 20, 2023, 12:08 PM IST

கணவர் அஜய் தேவ்கன் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ள கஜோல் பல சூடான காட்சிகளிலும், லிப் லாக் காட்சிகளும் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும் அளித்துள்ளார். கஜோலுக்கு இந்த அவதாரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கணவர் அஜய் தேவ்கன் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ள கஜோல் பல சூடான காட்சிகளிலும், லிப் லாக் காட்சிகளும் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும் அளித்துள்ளார். கஜோலுக்கு இந்த அவதாரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கணவர் அஜய் தேவ்கன் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ள கஜோல் பல சூடான காட்சிகளிலும், லிப் லாக் காட்சிகளும் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும் அளித்துள்ளார். கஜோலுக்கு இந்த அவதாரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் 90ஸ்களில் டாப் ஹீரோயினாக இருந்து வந்தவர் கஜோல். ஷாருக்கான், சல்மான்கான் என ஜோடி போட்டு வந்த இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது மற்றொரு பாலிவுட் ஹீரோவான அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த கஜோல், தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்தார். இதன் பின்னர் 20 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்.

தற்போது சினிமா தவிர வெஸ்சீரிஸ்களிலும் நடித்து வரும் கஜோல், சமீபத்தில் நெட்பிலிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்திருந்தார். இதில் கணவரால் துன்புறுத்தப்படும் மனைவியாகவும், விலைமாதுவாகவும் பல துணிச்சலான காட்சியில் நடித்திருந்தார் கஜோல்.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் தி ட்ரையல் என்ற வெப் தொடரில் நடித்திருக்கும் கஜோல், அதில் தன்னுடன் இணைந்த நடித்த பாகில்தான் நடிகரான அலி கானுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சியிலும் நடித்துள்ளார். இதில் மற்றொரு சிறப்பு அம்சமாக இந்த வெப் தொடரை கஜோல் கணவர் அஜய் தேவ்கன் தான் தயாரித்துள்ளார்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்து வரும் கஜோல் இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளது. திருமணத்துக்கு பின்னரும் தொடந்த இடைவெளி இல்லாமல் சினிமாக்களில் நடித்த வந்த போதிலும் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள், முத்த காட்சிகளில் நடிப்பதில்லை என்ற பாலிசியை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்து வந்த கஜோல் தற்போது அதை மீறியுள்ளார்.

கணவர் தயாரித்த தொடரிலேயே இதுபோன்ற சூடேற்றும் காட்சிகளில் நடித்துள்ள கஜோலை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். சமீப படங்களில் கஜோல் கணவர் அஜய் தேவ்கன் தன்னுடன் இணைந்து நடித்த நடிகைகளான தபு, ரகுல் ப்ரீத் சிங், எரிகா கர் ஆகியோருக்கு லிப் லாக் கொடுத்துள்ளார்.

இதற்கு பழிக்கு பழி வாங்கவே கஜோலும் இதுபோன்று நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பதாக கூறி வருகிறார்கள். கஜோல் நடித்துள்ள லிப் லாக் காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்கு கஜோல் - அலி கான் என இருவரும் சில முறை ஒத்திகை பார்த்த பின்னரே நடித்ததாக வெளியாகி இருக்கும் தகவல் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி