தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jyotika: 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ரீ என்ட்ரி;மாஸ் படத்தில் இணைந்த ஜோதிகா.. யார் ஹீரோ தெரியுமா?

Jyotika: 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ரீ என்ட்ரி;மாஸ் படத்தில் இணைந்த ஜோதிகா.. யார் ஹீரோ தெரியுமா?

May 15, 2023, 12:16 PM IST

திரைப்படத்தை இயக்குநர் விகாஸ் பால் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘குயின்’ ‘சூப்பர் 30’ ‘குட் பை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
திரைப்படத்தை இயக்குநர் விகாஸ் பால் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘குயின்’ ‘சூப்பர் 30’ ‘குட் பை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

திரைப்படத்தை இயக்குநர் விகாஸ் பால் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘குயின்’ ‘சூப்பர் 30’ ‘குட் பை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியில் பிரபல நடிகராக வலம் வரும் அஜய் தேவ்கன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்பட ‘போலா’. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் ரீமேக்காக வெளியான இந்தத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக அஜய் தேவ்கன் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் ஒன்றை தயாரித்து நடிக்கிறார்.இந்தப்படத்தில் அவர் உடன் நடிகர் மாதவனும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டி ருந்த நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவும் இந்தப்படத்தில் கமிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். 

நடிகை ஜோதிகா இந்தியில் கடைசியாக 1998 ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற படத்தில் அக்‌ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அஜய்தேவ்கன் -மாதவன் படத்தில் கமிட் ஆனதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் ரீ -என்ட்ரி கொடுக்கிறார்

இந்தத்திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் விகாஸ் பால் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘குயின்’ ‘சூப்பர் 30’ ‘குட் பை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி