தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jawan: இந்திய அளவில் வசூலில் சரிவை சந்தித்த ஜவான் - எவ்வளவு தெரியுமா?

Jawan: இந்திய அளவில் வசூலில் சரிவை சந்தித்த ஜவான் - எவ்வளவு தெரியுமா?

Marimuthu M HT Tamil

Sep 22, 2023, 11:05 AM IST

ஜவான் வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஜவான் வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஜவான் வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம், செப்டம்பர் 7ஆம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இதில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்திலும், வில்லனாக விஜய் சேதுபதியும், தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தனர். இந்நிலையில் ஜவான் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. படம் ரிலீஸாகி 15ஆவது நாளில், உலகளவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.  இருப்பினும், நம் நாட்டில் இப்படத்தின் வசூல் சற்று தொய்வடைந்துள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

Sacnilk.com கூறிய படி, இந்தியாவில் ஜவான் படத்தின் ஒரு வார வசூல் ரூ. 389.88 கோடி ஆகவுள்ளது. (இந்தி: ரூ. 347.98 கோடி, தமிழ்:ரூ. 23.86 கோடி மற்றும் தெலுங்கு: ரூ. 18.04 கோடி). அதேபோல், 9ஆம் நாள் ரூ. 19.1 கோடியும், 10ஆம் நாள் ரூ. 31.8 கோடியும், 11ஆம் நாள் ரூ. 36.85 கோடியும், 12ஆம் நாள் ரூ. 16.25 கோடியும், 13ஆம் நாள் ரூ. 14.4 கோடியும், 14ஆம் நாள் மற்றும் 15ஆம் நாள் ரூ. 8.85 கோடியும் சம்பாதித்துள்ளது. இந்தியாவில் ஜவான் படத்தின் மொத்த வசூல் இதுவரை ரூ. 526.73 கோடி. சமீபத்தில், ஜவான் அதிக வசூல் செய்த நான்காவது ஹிந்தி திரைப்படம் என்னும் ரெக்கார்டை பெற்றிருக்கிறது.செப்டம்பர் 20 நிலவரப்படி, உலகளவில், 907.54 கோடி வசூலித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி