தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan: ‘பாட்டும் நானே பாவமும் நானே’.. ஏகலைவன் பகிர்ந்த வீடியோ வைரல்!

Kamal Haasan: ‘பாட்டும் நானே பாவமும் நானே’.. ஏகலைவன் பகிர்ந்த வீடியோ வைரல்!

Apr 10, 2023, 02:04 PM IST

கமல்ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
கமல்ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

கமல்ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

அதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கிரைன் விபத்து, கொரோனா ஊரடங்கு, தயாரிப்பாளருக்கும், ஷங்கருக்கும் இடையேயான பிரச்சினை உள்ளிட்டவற்றால் படப்பிடிப்பு தடைபட்டது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்துவைக்க படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.

முதற்கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அதனை நிறைவு செய்த படக்குழு தைவான் நாட்டிற்குச் சென்றது. அங்குள்ள தைபே நகரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் அந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஷங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இதற்கிடையே படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். கிளாஸாக இருக்கும் அந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர் தற்போதும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் கண்ணாடி குவளை ஒன்றை மிருதங்கமாக கருதிய கமல், அதில் ஒரு ரிதத்தை வாசித்தார். ரிதம் பகுதி என்ற கேப்ஷனுடன் அவர் வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் சமுத்திரக்கனி, ரோபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி