தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hansika Marriage Video: ஹன்சிகாவின் லவ் ஷாடி டிராமா ட்ரெய்லர் வெளியீடு

Hansika Marriage Video: ஹன்சிகாவின் லவ் ஷாடி டிராமா ட்ரெய்லர் வெளியீடு

Feb 08, 2023, 11:33 AM IST

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் லவ் ஷாடி டிராமா என்ற பெயரில் ஸ்டீரிம் ஆக இருக்கும் ஹன்சிகா திருமண நிகழ்வில் ட்ரெய்லர் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் பிப்ரவரி 10ஆம் தேதி ஸ்டீரிம் ஆகிறது.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் லவ் ஷாடி டிராமா என்ற பெயரில் ஸ்டீரிம் ஆக இருக்கும் ஹன்சிகா திருமண நிகழ்வில் ட்ரெய்லர் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் பிப்ரவரி 10ஆம் தேதி ஸ்டீரிம் ஆகிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் லவ் ஷாடி டிராமா என்ற பெயரில் ஸ்டீரிம் ஆக இருக்கும் ஹன்சிகா திருமண நிகழ்வில் ட்ரெய்லர் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் பிப்ரவரி 10ஆம் தேதி ஸ்டீரிம் ஆகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஹன்சிகா. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

VijaySethupathi ACE Title Teaser: கிராபிக்ஸ், துப்பாக்கி, பைக் சேஸ்..! கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’

Karthik Kumar: நான் ஓரினச்சேரிக்கையாளனா?; ‘மன்னிப்பு கேட்கணும்.. வீடியோவ தூக்கணும்’- சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்

Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டோடா அரண்மனையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதையடுத்து ஹன்சிகாவின் திருமண நிகழ்வு லவ் ஷாடி டிராமா என்ற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக டீஸரும் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து வரும் 10ஆம் தேதி ஸ்டீரிம் ஆக இருக்கும் இந்த நிகழ்வின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள், திருமணம் என அனைத்தும் இடம்பெற்றிருக்கும் இந்த ட்ரெய்ல்ர் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹன்சிகா குடும்பத்தினர் இந்த திருமணத்தை நடத்துவதற்காக சந்தித்த அனைத்து விஷயங்கள், சவால்கள், சிக்கல்கள் பற்றி எடுத்துரைக்கும் விதமாக இந்த விடியோ அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடிகை ஹன்சிகா கூறியதாவது:

"எனது திருமணம் பற்றிய கனவு சிறுவயதில் இருந்தே ஏராளமாக இருந்தது. சோஹைலுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தபோது, எங்களது முழு குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்த்தனர்.

அப்போது எனது கனவுகளை நனவாகிறது என்று உணர்ந்தேன். திருமண நாளை நோக்கிய ஒவ்வொரு நிகழ்வுகளையும் பொக்கிஷமாக்க விரும்பினோம். எனது முழு நிகழ்வுகளின் ஒவ்வொரு நொடியையும் படமாக்கினோம்.

எனது திருமணம் நடைபெற்ற மண்டோடா கோட்டை எனது கனவு இடம். திருமணத்துக்காக ஒவ்வொரு விஷயங்களையும் திட்டமிட்டு முடிப்பதற்கு ஆறு வாரங்கள் ஆனது. அதுவொரு ரோலர்கோஸ்டர் பயணம் போல் அமைந்தது.

திருமணம் ஏற்பாடுகள் தொடங்கு நடைபெற்று முடியும் வரை சிரித்தோம், அழுதோம், சண்டையும் செய்தோம். இறுதியில் மாயாஜாலம் போல் எங்கள் திருமணம் நடைபெற்றது. அந்த இனிமையான தருணங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். அதற்கு நல்ல தளத்தை அமைத்துகொடுத்த டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு நன்றிகள்"

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி