தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Modern Love Chennai: ‘ஜிங்க்ருதா தங்கா..’ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு சென்னை வாழ் அனுபவம்.. கவனம் ஈர்க்கும் பாடல்!

Modern Love Chennai: ‘ஜிங்க்ருதா தங்கா..’ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு சென்னை வாழ் அனுபவம்.. கவனம் ஈர்க்கும் பாடல்!

May 16, 2023, 12:11 PM IST

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான 'லாலகுண்டா பொம்மைகள்' எனும் அத்தியாயத்தில் இடம்பெறும் இந்தப்பாடல், தொடரின் சாரம்சத்தை அழகாக படப்பிடித்து காட்டியிருப்பதுடன், பார்வையாளர்களுடனான உணர்ச்சிகளுடன் தொடர்புப் படுத்தி சென்னை வாழ் அனுபவத்தை கடத்துகிறது.

அமேசான் ஒரிஜினல் தொகுப்பான 'மாடர்ன் லவ் சென்னை' எனும் படைப்பிலிருந்து 'யாயும் ஞானமும்..' எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. இந்தப்பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

HBD Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்

இந்த நிலையில் இந்த சீரிஸில் இருந்து தற்போது ‘ஜிங்க்ருதா தங்கா..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகர மக்கள் பேசும் மொழியின் பாணியில் இடம்பெற்ற இப்பாடலின் வரிகளை பாக்கியம் சங்கர் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டன் இசையமைத்து பாடியிருக்கிறார்.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான 'லாலகுண்டா பொம்மைகள்' எனும் அத்தியாயத்தில் இடம்பெறும் இந்தப்பாடல், தொடரின் சாரம்சத்தை அழகாக படப்பிடித்து காட்டியிருப்பதுடன், பார்வையாளர்களுடனான உணர்ச்சிகளுடன் தொடர்புப் படுத்தி சென்னை வாழ் அனுபவத்தை கடத்துகிறது. இந்தப் பாடலின் மெல்லிசையும், சென்னை நிலவியல் பின்னணியில் வாழும் மக்களின் பேசும் மொழியில் இடம் பெற்ற பாடல் வரிகளும் கவனம் பெற்று இருக்கின்றன.

'மாடர்ன் லவ் மும்பை' மற்றும் 'மாடர்ன் லவ் ஹைதராபாத்'தின் வெற்றியைத் தொடர்ந்து 'மாடர்ன் லவ் சென்னை', எல்லைகளைக் கடந்த உறவுகளை பற்றி பேசும் சீரிஸாக வருகிறது. சென்னை களப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தமான கதைகளின், கலவையான உணர்வுகளை விவரிப்பதால் பார்வையாளர்களின் இதயங்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் மே 18ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி