தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amitabh Bachchan: ‘அதை மட்டும் நிறுத்துங்க’ - அமிதாப் பச்சனுக்கு கடிதம்!

Amitabh Bachchan: ‘அதை மட்டும் நிறுத்துங்க’ - அமிதாப் பச்சனுக்கு கடிதம்!

Aarthi V HT Tamil

Jan 17, 2023, 09:36 AM IST

Amitabh Bachchan Advertisement: ஆரோக்கியமற்ற பிஸ்கட் விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என அமிதாப் பச்சனுக்கு, நிபுணர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
Amitabh Bachchan Advertisement: ஆரோக்கியமற்ற பிஸ்கட் விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என அமிதாப் பச்சனுக்கு, நிபுணர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Amitabh Bachchan Advertisement: ஆரோக்கியமற்ற பிஸ்கட் விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என அமிதாப் பச்சனுக்கு, நிபுணர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

திரையுலக பிரபலங்கள் சினிமாவை தவிர்த்து விளம்பரங்களில் நடிப்பது சகஜமாகிவிட்டது. சமையல் எண்ணெய்கள், சாக்லேட்கள், உடைகள், பிஸ்கட்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட விளம்பரங்களில் பல பிரபலங்கள் நடிப்பதை பார்க்க முடிகிறது. அது பல சமயங்களில் சர்ச்சையாக மாறுவதையும் பார்த்து வருகிறோம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Radikaa Sarathkumar : ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை வெளுத்து வாங்கிய ராதிகா

Ramayanam Serial: சன் டிவியின் பிரமாண்ட பிளான்.. இன்று முதல் வரும் இராமாயணம் சீரியல்!

Star Movie Collection: நான்கு நாட்களில் அசுர வேட்டை.. உலகளவில் ஸ்டார் பட வசூல் என்ன தெரியுமா?

GV Prakash Saindhavi: இது தான் விஷயமா.. ஜி. வி. பிரகாஷ், சைந்தவி பிரிவுக்கு இது தான் காரணம்?

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது நடித்து இருக்கும் பிஸ்கட் விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக NAPI (Nutrition Advocacy in Public Interest) நடிகர் அமிதாப்பிற்கு கடிதம் எழுதி உள்ளது. டாக்டர் அருண் ஊடகங்களிடம் கூறுகையில், “அமிதாப் பச்சன் நடித்து இருக்கும் பிஸ்கட் விளம்பரம் உண்மையில் மோசடியானது. அந்த பிஸ்கட்டில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ளது. 

இந்த பிஸ்கட் நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்பின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சன் அதே பிஸ்கட்டைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்து நான் ஆச்சரியமடைந்தேன். 

அதிக பதப்படுத்தப்பட்ட, கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள். பொதுவாக, 10 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை அல்லது கொழுப்பைக் கொண்டிருக்கும் எந்தவொரு உணவுப் பொருளும் HFSS (கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிகம்) என வகைப்படுத்தப்படுகிறது. 

எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்களில் அமிதாப் பச்சன் நடிக்க வேண்டாம். ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களுக்கான விளம்பரங்களில் நடிப்பது சரியா என்பதை யோசித்துப் பாருங்கள்” என கேட்டு உள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் கடந்த சில ஆண்டுகளில் சில விளம்பரங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்து இருந்த கேட்டபரி டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் இருந்தது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் அவர் நடித்திருந்த காரணத்தினால் பலரும் அதை விரும்பி வாங்கியதாக கூறினார். சாக்லேட்டில் புழுக்கள் இருந்த பிறகு அந்த விளம்பரத்தில் அவர் வரவில்லை. 

மேலும், 7 ஆண்டுகளுக்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு குளிர்பான விளம்பரத்தில் இருந்து ஹார்லிக்ஸ் உள்ளிட்ட விளம்பரங்களில் இருந்து அவர் விலகின்றர். இப்போது NAPI கேட்டுக் கொண்டபடி இந்த பிஸ்கட் விளம்பரத்தில் நடிப்பதை அவர் நிறுத்திவிடுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி