தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rc15 Movie: ஒரு பாடலுக்கு ரூ.10 கோடியா… பிரமாண்ட திட்டம் போட்ட ஷங்கர்

RC15 Movie: ஒரு பாடலுக்கு ரூ.10 கோடியா… பிரமாண்ட திட்டம் போட்ட ஷங்கர்

Aarthi V HT Tamil

Mar 09, 2023, 08:30 AM IST

ஆர்சி 15 படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ரூ.10 கோடி செலவு செய்ய உள்ளதாக தகவல் சொல்கிறது.
ஆர்சி 15 படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ரூ.10 கோடி செலவு செய்ய உள்ளதாக தகவல் சொல்கிறது.

ஆர்சி 15 படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ரூ.10 கோடி செலவு செய்ய உள்ளதாக தகவல் சொல்கிறது.

நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஆர்சி 15. பான் இந்திய படமாக உருவாகி வரும் இது சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரசியல் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக வெளியாக உள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Rajinikanth: ரசிகர்களை சந்திக்கிறாரா ரஜினிகாந்த்?.. உண்மை பின்னணி என்ன? வந்தது உடனடி விளக்கம்!

Rajinikanth: விஜயகாந்த மாதிரி ஒருவரை இனிமே பார்க்க முடியாது.. ரஜினிகாந்த் உருக்கம்!

65 Years of Veerapandiya Kattabomman: ஆங்கிலேயர்களை எதிர்த்து கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மனின் கதை படமான கதை!

GV Prakash: 4 வருடமாக நீடித்த பிரச்னை.. ஜி.வி.பிரகாஷ் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் காரணத்தை விளக்கிய பயில்வான்

இந்த படத்தை டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த ஷெட்யூல் இம்மாதம் 19 அல்லது 20ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன்சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த புதிய ஷெட்யூலில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் தயாராகி வருகிறது.

இதனிடையே இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் பட பாணியில் இந்த பாடல் கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்குப் பிறகு அடுத்த ஷெட்யூல் ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

ஆர்சி 15 படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 27ஆம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியாகும் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு செனானியுடன் சிஇஓ போன்ற தலைப்புகள் பரிசீலனையில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆர்சி 15 படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸாக வெளியிட தயாராகி வருகின்றனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்காக ராம்சரண் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இம்மாதம் 15 ஆம் தேதி இந்தியா திரும்பலாம் என தகவல்கள் சொல்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி