தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pooja Hedge: நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மையா?

Pooja Hedge: நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மையா?

Aarthi V HT Tamil

Dec 15, 2023, 11:36 AM IST

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மை இல்லை என சொல்லப்படுகிறது.
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மை இல்லை என சொல்லப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மை இல்லை என சொல்லப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் முகமுடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

அதற்கு முன்னதாகவே இவர், ஆல வைகுண்டபுரமுலோ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள புட்டபொம்மா என்ற பாடல் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இந்த ஒரு பாடல் அவரை பாலிவுட், கோலிவுட், தோலிவுட் என எல்லா வுட்டில் கொண்டு சேர்த்தது.

ஆனால் இந்தப் படத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதால், பூஜா ஹெக்டேவின் திரையுலக வாழ்க்கை மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மகேஷ் பாபுவின் குண்டூர் கரம் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே நீக்கப்பட்டார். தற்போது தமிழில் எந்த பட வாய்ப்பும் இல்லாத பூஜா ஹெக்டே இந்தியில் ஷாஹித் கபூரின் தேவா படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பூஜா ஹெக்டே துபாய் சென்று உள்ளார். 

அங்கு அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்து இருக்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு பூஜா ஹெக்டே குழு சமீபத்தில் பதிலளித்து உள்ளது.

“இதுபோன்ற போலிச் செய்திகள் ஏன் உருவாக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இந்த செய்தியில் உண்மை இல்லை. தயவு செய்து இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்” என்றனர். 

மேலும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய செய்தியையும் நீக்கப்பட்டு வருகிறது. உண்மை தெரிந்ததும் பூஜாவின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நடிகை பூஜா ஹெக்டே தற்போது இந்தியில் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்த ஆக்‌ஷன்-த்ரில்லர் படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் மற்றும் சித்தார்த் ராய் கபூர் இயக்கி உள்ளனர். படத்தை ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்த ஆண்டு அக்டோபரில் இப்படம்  வெளியாகும் என கூறப்படுகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி