தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush Son : லைசன்ஸ் இல்லாமல் R 15 பைக் ஓட்டிய தனுஷ் மகன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Dhanush Son : லைசன்ஸ் இல்லாமல் R 15 பைக் ஓட்டிய தனுஷ் மகன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Divya Sekar HT Tamil

Nov 16, 2023, 12:29 PM IST

தனுஷ் மகன் யாத்ரா R 15 பைக் ஓட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தனுஷ் மகன் யாத்ரா R 15 பைக் ஓட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தனுஷ் மகன் யாத்ரா R 15 பைக் ஓட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

2004ஆம் ஆண்டு தனுஷ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியுள்ள தனுஷ், உலகம் முழுவதும் புகழ் பெற்ற இந்திய நடிகராக உள்ளார். தனுஷை மணமுடித்த பிறகு தனுஷ் நடித்த 3, கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

தனுஷை விட இரண்டு வயது மூத்தவர் ஐஸ்வர்யா. தனது 21ஆவது வயதிலேயே நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து கோலிவுட் சினிமாவில் வளர்த்து வரும் கதாநாயகனாக பேசப்பட்ட தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்தது குறித்து அப்போது பல்வேறு விதமான எதிர்மறை கருத்துகளும் முன்வைக்கப்பட்டன். 

ஆனால் ஐஸ்வர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு தனுஷின் சினிமா கேரியர் கிராப் ஏற்றத்துக்கு சென்றதை விமர்சித்தவர்கள் கண்கூடாக பார்த்ததும், தனுஷின் வெற்றியை கொண்டாடவும் செய்தனர். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலை வெறி' என்ற ஒற்றை பாடல் மூலம் உலக பேமஸ் ஆன தனுஷ். இதன் பிறகு பாலிவுட், ஹாலிவுட் என தனது ரசிகர்களின் எல்லையை மேலும் விரிவாக்கி இந்திய நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்திருந்தனர். ஐஸ்வர்யா- தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள். ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்ய வில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தனுஷுன் மூத்த மகன் யாத்ரா ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணயைத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவில் அவர் பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுக்கிறார். இதனை பார்த்த ஒருவர் போட்டோ வீடியோ எடுக்க, அந்த உதவியாளர் யாரும் போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார். பொது சாலையில் தான் எடுக்கிறோம் என்று கூறி அவர் எடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு இன்னும் 18 வயதே ஆகவில்லை. அதற்குள் பைக் ஓட்ட பழகுவது தவறானது. அதுவும் ஆர்15 பைக் ஓட்டுவது மிகவும் தவறு. அப்படி அவர் ஓட்டி பழக வேண்டும் என்றால் பாதுகாப்பான இடத்தில் தான் ஓட்ட வேண்டும். ஆனால் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்ட பழக்குவது குற்றம் என்று பதிவிட்டு வருகின்றனர். இதை தனுஷ் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி