தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dasara Songs: ரசிகர்கள் கொண்டாடும் தீக்காரி பாடல்

Dasara Songs: ரசிகர்கள் கொண்டாடும் தீக்காரி பாடல்

Aarthi V HT Tamil

Feb 16, 2023, 12:58 PM IST

நடிகர் நானி நடிக்கும், தசரா திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான தீக்காரி பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் நானி நடிக்கும், தசரா திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான தீக்காரி பாடல் வெளியாகி உள்ளது.

நடிகர் நானி நடிக்கும், தசரா திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான தீக்காரி பாடல் வெளியாகி உள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், தசரா. 

ட்ரெண்டிங் செய்திகள்

Star Movie Collection: நான்கு நாட்களில் அசுர வேட்டை.. உலகளவில் ஸ்டார் பட வசூல் என்ன தெரியுமா?

GV Prakash Saindhavi: இது தான் விஷயமா.. ஜி. வி. பிரகாஷ், சைந்தவி பிரிவுக்கு இது தான் காரணம்?

48 Years Of Annakili: இளையராஜாவை கண்டெடுத்த படம்.. ஒரு பெண்ணின் காதலை வெளிப்படையாகச் சொன்ன முதல் படம் 'அன்னக்கிளி’

Singer Suchitra: என் முன்னாள் கணவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா தனுஷ்? - நியாயம் கேட்கும் பாடகி சுசித்ரா!

நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. 

மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென்சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. 

நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இப்பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன் நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது, பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். தசரா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி