தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aparna Balamurali: நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்

Aparna Balamurali: நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்

Aarthi V HT Tamil

Jan 19, 2023, 02:43 PM IST

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் ரசிகர்களால் தவறாக நடந்து கொள்ளும் செய்திகளை அடிக்கடி பார்த்து வருகிறோம். படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும், விழாகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நட்சத்திரங்கள் மோசமான அனுபவங்களை சந்திக்கும் செய்திகளை பார்க்கிறோம். அந்த வகையில் நடிகை அபர்ணாவிடம் மாணவர் ஒருவர் எல்லை மீறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

HBD K. Jamuna Rani: 6,000 பாடல்கள் பாடியவர்.. பல ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஜமுனா ராணி பிறந்த நாள்

Tamannaah Bhatia: படுக்கையறை காட்சியில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. காரணத்தை விளக்கிய தமன்னா

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

தங்கம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சட்டக் கல்லூரிக்கு வந்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அவருடன் நடிகர் வினீத் சீனிவாசன், இசை அமைப்பாளர் பிஜிபால் மற்றும் சில பிரபலங்கள் மேடையில் இருந்தனர். இதற்கிடையில், ஒரு மாணவர் மேடையில் நுழைந்து தவறாக நடந்து கொண்டார்.

மாணவர், அபர்ணா பாலமுரளிக்கு மலர் கொடுக்க மேடைக்கு வந்தார். மாணவர் மேடைக்குள் நுழைந்தவுடன் பார்வையாளர்களிடமிருந்து கூச்சல் எழுந்தது. பூ கொடுத்துவிட்டு நடிகையின் கையை பிடித்து எழுந்து நிற்க வைக்க முயன்றார். அபர்ணா தயங்கியபோது, ​​அவர் கையை இழுத்தார். அபர்ணா எழுந்து நின்று புகைப்படம் எடுக்க முயன்றபோது அந்த இளைஞர் நடிகையின் தோளில் கை போட முயன்றார். 

இவரின் செயலை பார்த்து அபர்ணா பாலமுரளியின் முகத்தில் அதிருப்தி தெரிந்தது. ஆனாலும் மாணவன் அங்கிருந்து செல்லவில்லை. கையை பிடிப்பதும் தோளில் கை வைக்க முயன்றார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அந்த மாணவன் மீது ரசிகர்களிடையே கடும் கோபம் எழுந்துள்ளது.

பலர் முன்னிலையில் தவறாக நடந்து கொண்ட மாணவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. 

சூரரைப் போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி தனது சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார். தங்கம் படம் வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனால் படக்குழுவினர் மிகவும் பிஸியாக விளம்பர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையாளத்தில் தொடர்ந்து பிஸி ஹீரோயினாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தற்போது ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் தூம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துடன் மேலும் ஆறு படங்களை ஒப்புக்கொண்டுள்ளார் அபர்ணா பாலமுரளி.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி