தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chandramukhi 2 Ott: வந்தது அறிவிப்பு.. சந்திரமுகி 2 ஓடிடியில் எப்போது பார்க்கலாம்!

Chandramukhi 2 OTT: வந்தது அறிவிப்பு.. சந்திரமுகி 2 ஓடிடியில் எப்போது பார்க்கலாம்!

Aarthi V HT Tamil

Oct 21, 2023, 02:54 PM IST

சந்திரமுகி 2 ஓடிடியில் எப்போது வெளியாகும் என பார்க்கலாம்.
சந்திரமுகி 2 ஓடிடியில் எப்போது வெளியாகும் என பார்க்கலாம்.

சந்திரமுகி 2 ஓடிடியில் எப்போது வெளியாகும் என பார்க்கலாம்.

'சந்திரமுகி 2' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி படம் வரும், அக்டோபர் 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Allu Arjun: தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன?

Bayilvan Ranganathan: ‘என் மகளும் இன்னொரு பொண்ணுமா.. ச்சே.. நாக்கு அழுகிடும்..’: பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!

Ajith Kumar : அஜித்தின் அடுத்த படத்தின் முதல் நாளிலேயே ஆவேசமான அடிதடி.. தல.. க்கு என்ன ஆச்சு.. விடாமுயற்சி சாத்தியமா!

GV Prakash and Saindhavi: இவங்களுமா.. காதல் மனைவியை விவாகரத்து செய்யும் ஜி.வி.பிரகாஷ்?

இயக்குநர் பி. வாசு இயக்கிய இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.

60 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் படம் உருவாகினாலும் ஃபாக்ஸ் ஆபிஸ் தோல்வியை தழுவியது. 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள 'சந்திரமுகி 2' திரைப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் வரை கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோருடன் மஹிமா நம்பியார், லட்சுமி மேனன் மற்றும் சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படத்தில் நடித்த கங்கனா ரனாவத் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் ரூ 15 கோடியும், வடிவேலு ரூ 2 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.

ஸ்ருஷ்டி டாங்கேக்கு ரூ. 30 லட்சமும், லட்சுமி மேனனுக்கு ரூ. 25 லட்சமும் பெற்று இருக்கிறார்கள். ராதிகா சரத்குமாருக்கு ரூ.35 லட்சமும், மிதுன் ஷியாமுக்கு ரூ.25 லட்சமும், ராவ் ரமேஷ் வீட்டிற்கு 50 லட்சத்தையும், சுரேஷ் மேனனுக்கு 30 லட்சத்தையும் கொடுத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி