தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Captain Miller Update: தனுஷ் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Captain Miller Update: தனுஷ் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Aarthi V HT Tamil

Jan 22, 2023, 01:31 PM IST

நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.
நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.

நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.

‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தற்போ இயக்கி வரும் திரைப்படம், கேப்டன் மில்லர். இதில் நாயகான நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

Mysskin Vs Parthiban: உடைந்த பனிப்போர்.. 'ஐயா நான் அப்படி சொல்லல’.. இயக்குநர் பார்த்திபனிடம் பம்மிய மிஷ்கின்!

GV Prakash Saindhavi: தமிழர் மாண்பு எங்க போச்சு.. அத்துமீறி நுழைறீங்க... செருப்படி பதில் கொடுத்த ஜிவி!

Karthigai Deepam: தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா!

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், ஜான் கொக்கன் கலந்து கொண்டனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் உருவாகி வரும் இப்படம் சுதந்திர காலத்தில் நடக்கும் கதை. மேலும் இப்படம் இந்திய அளவில் பெரிய அளவாக உருவாகவுள்ளது. 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்டது கேப்டன் மில்லர்.

குற்றாலத்தில் கேப்டன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தனுஷ் தற்போது இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தனுஷுக்கு மொத்தம் மூன்று தோற்றங்கள் இருக்கும். அவருடன் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் மற்றும் மூர், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

நடிகை பிரியங்கா அருள் மோகன், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் இன்று ( ஜனவரி 22) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் ’திருச்சிற்றம்பலம்’ , ‘நானே வருவேன்’ மற்றும் ‘தி கிரே மேன்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது.

அது மட்டுமின்றி இந்த ஆண்டு வாத்தி படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம். வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி