தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ayesha Relationship: காதலரை அறிமுகம் செய்து வைத்த ஆயிஷா

Ayesha Relationship: காதலரை அறிமுகம் செய்து வைத்த ஆயிஷா

Aarthi V HT Tamil

Feb 15, 2023, 12:34 PM IST

நடிகை ஆயிஷா தனது காதலரை அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.
நடிகை ஆயிஷா தனது காதலரை அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

நடிகை ஆயிஷா தனது காதலரை அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

ஜீ தொலைக்காட்சியில் வந்த சத்யா தொடர் மூலம் பிரபலமானவர் ஆயிஷா. இவர் அதில் அதிரடி ரவுடி பேபியாக நடித்த ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். 

ட்ரெண்டிங் செய்திகள்

MS Subbulakshmi: நயன்தாரா (அ) த்ரிஷா..உருவாகிறது MS சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு! - களமிறங்கிய பிரபல இயக்குநர்!

YouTuber Irfan: ’இர்பானின் சர்ச்சை வீடியோ நீக்கம்! பறந்த நோட்டீஸ்! பம்மிய இர்பான்!’

YouTuber Irfan: குழந்தை பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; இர்ஃபானை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - சுகாதாரத்துறை

Suchitra issue: சுத்தி விட்ட சுசித்ரா.. ‘பட்டியலின சமூகத்த அப்படி ஆபாசமா’- கார்த்திக் மீது பாய்ந்த புகார்

இந்த சீரியல் மூலம் கிடைத்த வரவேற்பால் நடிகை ஆயிஷா, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதலில் அதில் டல்லாக இருந்தார். அசீமுடன் போராட்டம் என முதல் வாரங்களில் சண்டை போட்டார். பின்னர் அதிரடியாக ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடினார். சுமார் 8 எபிசோட் விளையாட்டிய அவர் எதிர்பாராத விதமாக திடிரென நிகழ்ச்சியில் வெளியேறினார். ஆயிஷாவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 12.50 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா இருந்த போது அவர் பல பேரை காதலித்தாக கூறப்பட்டது. அதே போல் அவர் சத்யா தொடரில் நடித்த விஷ்ணுவை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே காதலன் பற்றி பேசிய ஆயிஷா, கடந்த சில நாட்களுக்கு முன் காதலன் முகத்தை மறைத்தபடி கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இருந்தார். 

அதைப் பார்த்த பலரும் ஆயிஷாவின் காதலன் யாராக இருக்கும் என அனைவரும் கேட்டு வந்தனர்.

இதனிடையே காதலர் தினமான நேற்று ( பிப்ரவரி 14 ) தனது காதலன் லோகேஷை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி உள்ளார். இருவரும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

காதலனை அறிமுகம் செய்து வந்த ஆயிஷாவிற்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமணம் எப்போது என அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி