தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  En Uyir Thozhan Babu: ஓய்ந்தது போராட்டம்; காலமானார் ‘என் உயிர் தோழன்’ பாபு!

En Uyir Thozhan Babu: ஓய்ந்தது போராட்டம்; காலமானார் ‘என் உயிர் தோழன்’ பாபு!

Sep 19, 2023, 12:24 PM IST

‘என் உயிர் தோழன்’ படத்தில் நடித்த பாபு காலமானார்.
‘என் உயிர் தோழன்’ படத்தில் நடித்த பாபு காலமானார்.

‘என் உயிர் தோழன்’ படத்தில் நடித்த பாபு காலமானார்.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாபு. ‘என் உயிர் தோழன்’ என்ற திரைப்படமே அவருக்கு அடையாளமாக மாறியது. அதனைத்தொடர்ந்து ‘என் உயிர் தோழன்’ பாபு என்றே அழைக்கப்பட்டார். 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

அந்தப் படத்திற்கு பிறகு ‘பெரும்புள்ளி’ ‘தாயம்மா’ ‘பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் 5 வதாக கமிட் ஆன திரைப்படம்தான் ‘மனசார வாழ்த்துங்களேன்’. அந்தப்படத்தின் போதுதான் அந்த சோக சம்பவம் அரங்கேறியது. காட்சிபடி மாடியில் இருந்து கதாநாயகன் குதிக்க வேண்டும். படக்குழு டூப் போட்டு எடுக்கலாம் என்று சொல்லியும் இல்லை.. இல்லை.. காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்று சொல்லி அவரே கீழே குதித்தார் பாபு. 

ஆனால் எதிர்பாரத விதமாக நிலை தடுமாறு வேறு இடத்தில் குதித்து விட்டார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு எலும்புகள் நொறுங்கின. முதுகு தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை செய்தும் எதுவும் முழுதாக பலனிக்க வில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இயக்குநர் பாரதிராஜா அவரை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார். 

பாபுவை பார்த்த உடன் பாரதிராஜா தேம்பி அழுத காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பாபுவின் 80 வயதான தாயார் மட்டுமே அவரை உடனிருந்து இறுதி வரை கவனித்து வந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாபுவின் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன்றி காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி