தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Udhayanidhi Stalin:'பெரியார் சிலை பரிசு’ -அயலி இயக்குநருக்கு உதயநிதி பாராட்டு!

Udhayanidhi Stalin:'பெரியார் சிலை பரிசு’ -அயலி இயக்குநருக்கு உதயநிதி பாராட்டு!

Feb 14, 2023, 02:21 PM IST

அயலி வெப் சீரிஸ் இயக்குநர் முத்துக்குமாரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்
அயலி வெப் சீரிஸ் இயக்குநர் முத்துக்குமாரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்

அயலி வெப் சீரிஸ் இயக்குநர் முத்துக்குமாரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்

அறிமுக இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படபுகழ் அபிநட்சத்திரா, மதன், அனுமோள், லிங்கா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் 26 ஆம் தேதி (26-01-2023) ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் ‘அயலி’. பெண் கல்விக்கு எதிராக இருக்கும் கிராமத்தில் டாக்டராக விரும்பும் மாணவி என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த சீரிஸ்மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கான சான்றுதான் கல்வராயன் மலை பகுதியில் உள்ள பாச்சேரி - அரசு பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் மாணவர்களிடையே அயலி திரைப்படம் திரையிடப்பட்டு அதைத்தொடர்ந்து விவாதம் நடத்தப்பட்டது. பலரும் இந்த சீரிஸ் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இந்த வெப் சீரிஸை இயக்கிய முத்துக்குமாரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், “ ‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்.” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி