தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Taapsee : வாய்ப்புகள் வரவில்லை.. சிறிய படங்களில் நடிப்பதே மனதுக்கு இதமாக இருக்கிறது.. மனம் திறக்கும் டாப்ஸி!

Actress Taapsee : வாய்ப்புகள் வரவில்லை.. சிறிய படங்களில் நடிப்பதே மனதுக்கு இதமாக இருக்கிறது.. மனம் திறக்கும் டாப்ஸி!

Divya Sekar HT Tamil

Oct 06, 2023, 11:10 AM IST

சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் டாப்ஸி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசிய சில விஷயங்களை இங்கு காண்போம்.
சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் டாப்ஸி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசிய சில விஷயங்களை இங்கு காண்போம்.

சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் டாப்ஸி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசிய சில விஷயங்களை இங்கு காண்போம்.

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இதில் கதாநாயகியாக நடித்தன் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. அதனையடுத்து இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இவர் தமிழில் காஞ்சனா, கேம் ஓவர், அனபெல் சேதுபதி,ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். பாலிவுட்டில் வெளியான பிங்க் என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. ஹிந்தி, தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் டாப்ஸி கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.அவர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் இதில் காண்போம்.

தெலுங்கு படங்களில் இப்போது நடிப்பது இல்லையே ஏன்?

நான் என்ன செய்ய முடியும்? சரியான வாய்ப்புகள் வரவில்லை. அப்படியே வந்தாலும் கதைகள் சுத்தமாக பிடிக்கவில்லை. கதை பிடிக்காவிட்டால் எந்த மொழி படத்திலும் நடிக்கவே மாட்டேன்.

முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே நடிக்கிறீர்களே? கமர்ஷியல் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டீர்களா?

அதற்கு வாய்ப்புகள் வரவில்லை. வந்தால் நடிக்க ஆட்சேபம் இல்லை. என்னை பொறுத்த வரை சிறிய படங்களில் நடிப்பதே மனதுக்கு இதமாக இருக்கிறது.

சிறிய படங்களில் சம்பளம் குறைவாக தான் கிடைக்கும்?

படங்களுக்கு ஏற்ற மாதிரி தான் எனது சம்பளம் கூட இருக்கும். சம்பளம் குறைவாக கிடைத்தாலும் சிறிய படங்களில் நடிப்பதில் ஆத்ம திருப்தி கிடைக்கும். சிறிய படங்களில் கதை முழுவதும் என்னையே சுற்றி வரும். எனக்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். அந்த உணர்வு கொடுக்கும் சுகம் அலாதியானது என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி