தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘இதெல்லாம் கேவலம்…’ கோவை விமான நிலையத்தில் மத பாகுபாடு என சனம் ஷெட்டி வீடியோ!

‘இதெல்லாம் கேவலம்…’ கோவை விமான நிலையத்தில் மத பாகுபாடு என சனம் ஷெட்டி வீடியோ!

Jan 19, 2023, 12:49 PM IST

Sanam Shetty Twitter: ‘சோதனை செய்வதாக இருந்தால், அனைவரின் உடைமைகளும் சோதனை செய்திருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும். ஏன், தோற்றத்தை வைத்து மதத்தை வைத்து முடிவுக்கு வருகிறார்கள்? இது எவ்வளவு கேவலம்?’ -சனம் ஷெட்டி! (sam.sanam.shetty Instagram)
Sanam Shetty Twitter: ‘சோதனை செய்வதாக இருந்தால், அனைவரின் உடைமைகளும் சோதனை செய்திருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும். ஏன், தோற்றத்தை வைத்து மதத்தை வைத்து முடிவுக்கு வருகிறார்கள்? இது எவ்வளவு கேவலம்?’ -சனம் ஷெட்டி!

Sanam Shetty Twitter: ‘சோதனை செய்வதாக இருந்தால், அனைவரின் உடைமைகளும் சோதனை செய்திருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும். ஏன், தோற்றத்தை வைத்து மதத்தை வைத்து முடிவுக்கு வருகிறார்கள்? இது எவ்வளவு கேவலம்?’ -சனம் ஷெட்டி!

நடிகை சனம் ஷெட்டி கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அப்போது நடந்த சோதனையில், பாகுபாடு காட்டப்பட்டதாக சனம் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

ட்ரெண்டிங் செய்திகள்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! - வெங்கடேஷ் பட் பளார்

Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

‘‘இப்போது தான் சென்னை வந்துள்ளேன். கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ஏர்இந்தியா விமானத்தில் வந்தேன். வருத்தமான ஒரு விசயம் நடந்தது, ரொம்ப கஷ்டமாக இருந்தது. இதை கண்டிப்பாக ஷேர் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

பாதுகாப்பு என்கிற பெயரில், குறிப்பாக விமானத்தில் ஏறும் முன்பு, என்னுடைய உடைமைகளும், இரு முஸ்லிம் ஆண்களின் உடைமைகளை மட்டும், தனியாக அழைத்து சோதனை செய்தார்கள். அந்த இரு பயணிகளும் இஸ்லாமிய தொப்பி அணிந்திருந்தார்கள்.

அப்போதே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஏன் இப்படி சோதனை செய்கிறீர்கள் என்று கேட்டேன், இது ‘ரேன்டம் செக்’ என்றார்கள். 190 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்தார்கள்.என் பெயரை பார்த்ததும், என்னை அழைத்து சோதிக்கிறார்கள். மற்ற இருவரை, அவர்களின் ஆடையை தோற்றத்தை பார்த்து அழைத்து சோதனை செய்தார்கள்.

அந்த பயணிகள் இருவரும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். நான் அவர்களுடன் பேசிக்கொண்டு வந்தேன். தொப்பி அணிந்ததால் எங்களை சோதனை செய்கிறார்கள் என்று அவர்கள் கூறியது, ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கும் ரொம்ப கோபமாக இருந்தது. சோதனை செய்தது, ஒரு பெண் அதிகாரி. அவர் யார் என்பதும், ஏர்லைன்ஸிற்கு தெரிந்திருக்கும்.

ஸ்கேனர் இல்லை எதுவும் இல்லை, பார்வையில் சந்தேகப்பட்டு சோதனை செய்வது சரியானது இல்லை. சோதனை செய்த அந்த பெண்ணுக்கு மட்டும் எக்ஸ்ரே பார்வை இருக்கிறதா? ஏன், அங்கே இருக்கும் மற்றவர்களிடம் பேக் இல்லையா? அவர்கள் எதுவும் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லையா? கேட்டால், குடியரசு தினம், பாதுகாப்பு நடவடிக்கை என்கிறார்கள். அது நல்ல விசயம் தான், அதற்காக எங்கள் மூன்று பேர் பேக்கை மட்டும் சோதனை செய்தது ஏன்? அதில் என்ன லாஜிக் இருக்கிறது?

சோதனை செய்வதாக இருந்தால், அனைவரின் உடைமைகளும் சோதனை செய்திருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும். ஏன், தோற்றத்தை வைத்து மதத்தை வைத்து முடிவுக்கு வருகிறார்கள்? இது எவ்வளவு கேவலம்? தயவு செய்து இதை நிறுத்துங்கள்,’’

என்று அந்த வீடியோவின் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

குறிப்பிட்ட சிலரை மட்டும் சோதனை செய்வது கஷ்டமாக உள்ளது, சோதனை செய்தால் அனைவரின் உடைமைகளையும் சோதனை செய்ய வேண்டும் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். நடிகை சனம்ஷெட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது,

‘‘வருகிற 26 ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது எனவும், இதன்படி கோவை விமான நிலையத்தில் பயணிகள் 2 கட்டமாக சோதனை செய்யப்படுகின்றனர்.

விமான நிலையத்தின் உள்ளே செல்லும் போது ஒரு முறையும், விமானத்தில் ஏறும் முன் ஒரு முறையும் சோதனை செய்யப்படுகிறது , குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தபடுவதாக தெரிவித்த,’’ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி