தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Sevvalai Rasu Passes Away: நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

Actor Sevvalai Rasu Passes Away: நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

Manigandan K T HT Tamil

May 18, 2023, 12:08 PM IST

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் செவ்வாழை ராசு. இவருக்கு வயது 70.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் செவ்வாழை ராசு. இவருக்கு வயது 70.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் செவ்வாழை ராசு. இவருக்கு வயது 70.

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார் செவ்வாழை ராசு. அவருக்கு வயது 70.

கந்தசாமி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யாவின் சகோதரர் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன.

அவரது முதல் படம் பருத்தி வீரன். இயக்குனர் அமீர் இயக்கியிருந்தார். 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்தி வீரன். நடிகை பிரியாமணியின் இப்படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்றார்.

இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராசு.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ராசு, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு செவ்வாழை ராசு என அழைக்கப்பட்டார்.

நான் சிவப்பாக இருந்ததால் செவ்வாழை ராஜு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படி தான் எனக்கு இந்த பெயர் வந்தது. எங்கள் குடும்பம் விவசாயம் குடும்பம். நாங்கள் ஆரம்பத்தில் விவசாயம் தான் செய்து கொண்டிருந்தோம் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே தான் இவர் நடித்த முதல்படம். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான செவ்வாழை ராசு, அரசியலில் சாதிக்கவும் முயற்சி செய்தார். பின்னர் திரைத்துறையில் தடம் பதித்தார். பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் மனோ பாலா சமீபத்தில் மறைந்ததை அடுத்து திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி