தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  26 Years Of Porkkaalam: மறக்க முடியுமா? - நெஞ்சை உருக வைக்கும் ‘பொற்காலம்’ வெளியான நாள் இன்று!

26 Years of Porkkaalam: மறக்க முடியுமா? - நெஞ்சை உருக வைக்கும் ‘பொற்காலம்’ வெளியான நாள் இன்று!

Karthikeyan S HT Tamil

Oct 30, 2023, 08:50 AM IST

பொற்காலம் திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனாலும், 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் இன்றைக்கும் மிகப்பெரிய ஹிட். இப்படம் குறித்த சுவராஸ்ய தகவல்கள் இதோ..! (Twitter)
பொற்காலம் திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனாலும், 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் இன்றைக்கும் மிகப்பெரிய ஹிட். இப்படம் குறித்த சுவராஸ்ய தகவல்கள் இதோ..!

பொற்காலம் திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனாலும், 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் இன்றைக்கும் மிகப்பெரிய ஹிட். இப்படம் குறித்த சுவராஸ்ய தகவல்கள் இதோ..!

இயக்குநர் சேரனின் படைப்பில் வெளியான தரமான திரைப்படம் 'பொற்காலம்'. முரளி, மீனா, சங்கவி, வடிவேலு, மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிராமத்தில் மண் பாண்டங்கள் செய்யும் தொழிலை செய்து வரும் முரளி, வாய் பேச முடியாத தன் தங்கை ராஜேஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மண்பாண்டத் தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருவதால் வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது முரளிக்கு.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்தச் சூழ்நிலையில் முரளியின் தந்தையான மணிவண்ணனோ குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போயிருப்பதுடன் சூதாட்டத்திலும் தொடர்ந்து பணத்தை இழந்து வருகிறார். இதற்கிடையில் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடுகிறார் முரளி. மீனா மற்றும் சங்கவி ஆகியோர் முரளியை விரும்புவர். திருமணத்திற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாலும், தன்னுடைய அண்ணன் கஷ்டப்படுவதையும் பார்த்த தங்கை ராஜேஷ்வரி தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் மன வேதனை அடைந்த முரளி, மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வார். மாற்றுத்திறனாளியின் வாழ்வை, அவர்கள் சந்திக்கும் பிரச்னையை நெஞ்சை உருக வைக்கும் அளவிற்கு படம் பிடித்துக் நேர்த்தியாக காட்டியிருந்தார் சேரன்.

தேனிசை தென்றல் தேவாவின் துள்ளலான இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக சிங்குச்சா... பச்ச கலரு சிங்குச்சா பாடல் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து'... பாடலை யாராவது மறக்க முடியுமா?.. இதுஒருபுறம் இருக்க வடிவேலு பாடிய ஊனம் ஊனம்... பாடல் நம் மனங்களை எல்லாம் இன்றும் கொஞ்சம் கரைய செய்யும்.

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிந்து சாதனை படைத்த 'பொற்காலம்' 1997 ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 30ம் தேதி ரிலீஸானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 26 ஆண்டுகளாகின்றன. 26 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் 'பொற்காலம்' திரைப்படம் என்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் ஒரு பொக்கிஷம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி