தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Perukku Worship: வீட்டில் வைத்தே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

Aadi Perukku Worship: வீட்டில் வைத்தே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

Aug 02, 2023, 12:31 PM IST

ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வைத்தே வழிபாடு செய்யும் முறைகளையும், வழிபாடு செய்யும் நேரம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வைத்தே வழிபாடு செய்யும் முறைகளையும், வழிபாடு செய்யும் நேரம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வைத்தே வழிபாடு செய்யும் முறைகளையும், வழிபாடு செய்யும் நேரம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. அதேபோல் நதித்துறை அருகில் இல்லாதவர்கள் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து படைப்பது, வடை,பாயசம் உள்ளிட்டவைகள் செய்து இலை போட்டு படைப்பதும் வழக்கமாக சிலர் வைத்துள்ளனர்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

ஆடிப்பெருக்கு அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பொதுவான நாளாக இருந்து வருகிறது. ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு, ஆடி பதினெட்டு என அழைக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்கிற வழக்கம் கடைப்படிக்கப்பட்டு வருகிறது. அப்படியே எதாவது ஒரு காரியத்தை செய்ய விரும்பினாலும், ஆடி பெருக்கு நாளில் அதை செய்தால் அவை பெருகி வளம் பெருகும் என்ற நம்பிக்கை இருப்பதால், அந்த நாளில் திருமணம் தொடர்பான ஏற்பாடுகள், புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றை செய்யலாம்.

பொதுவாக இந்த நாளில் குளம், ஆற்றங்கரை பகுதிகளில் கூடும் மக்கள் மஞ்சளை வைத்து பிள்ளையார் செய்து, தேங்காய், பழம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை படைத்து வழிபடுகிறார்கள். பெண்கள் பலரும் புதிய தாலி காயிற்றை மாற்றி கொள்வார்கள்.

வெளியே செல்லாமல் வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜையை செய்ய விரும்புகிறவர்கள், அதிகாலையில் எழுந்தவுடன் வீடுகள் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் சாமி படங்களை மலர்களால் அலங்கரித்து, வீட்டின் உள்ள பொருள்களுக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் பிடித்து சிறிதளவு மஞ்சள், உப்பு சேர்த்து பூஜை அறையில் வைத்து, அதை புனித நீராக பாவித்து பூஜை செய்து வழிபடலாம்.

இந்த நாளில் தாலி கயிற்றை மாற்ற கொள்ள நினைக்கும் பெண்கள், சாமி படங்களுக்கு முன் தாலி கயிற்றை வைத்து வழிபட வேண்டும். பின் கணவர் கைகளிலிலோ அல்லது கணவர் வெளியூரில் இருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களின் கைகளிலோ புதிய தாலி கயிற்றை மாற்றி கொள்ளலாம். புதிதாக திருமண பெண்களுக்கு இந்த நாளில் தாலி பெருக்கி போடுவது விசேஷமாகும்.

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆக்ஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் வீட்டில் பூஜை செய்து தாலி கயிறு மாற்றி கொள்ள நினைக்கும் பெண்கள் காலை 10.35 முதல் 11.45 வரை செய்யலாம். இதன் பிறகு குறிப்பாக 12 மணிக்கு மேல் உச்ச காலத்தில் செய்ய கூடாது. வீட்டிலேயே இலை போட்டு படையல் வைப்பவர்கள் பகல் 12 மணி முதல் 1.30 வரை செய்யலாம்.

ஆடிப்பெருக்கு நாளில் எந்த பொருளை வாங்கினாலும் அது வளத்தை கொடுக்கும் விதமாக அமையும். அந்த வகையில் மங்களகரமான எந்த பொருளையும் வாங்கலாம். மஞ்சள், உப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இவை இரண்டையும் வாங்கினால் சிறப்பு. இந்த பொருள்கள் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்த பின்னர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மங்கள பொருள்களால் வீட்டில் ஆனந்தம், சுபிக்‌ஷம் பெருகும் என்பது நம்பிக்கை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி