தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Kali Pooja: சனி வக்ர பெயர்ச்சி..காளி பூஜை வரை தான்..செல்வ மழையில் 3 ராசிகள்!

Shani Kali Pooja: சனி வக்ர பெயர்ச்சி..காளி பூஜை வரை தான்..செல்வ மழையில் 3 ராசிகள்!

Jul 18, 2023, 03:18 PM IST

சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சி காலத்தில் ராஜயோகம் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சி காலத்தில் ராஜயோகம் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சி காலத்தில் ராஜயோகம் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். பக்தர்களின் செய்வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களைக் கொடுக்கக் கூடியவர் இவர். ஜூன் மாதத்தில் இருந்து வக்கிர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் 140 நாட்கள் பின்னோக்கி நகர்ந்து மகர ராசியில் பயணம் செய்து வருகிறார்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

ஒரு ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டுகள் அதில் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒரு முறை சனிபகவான் வக்ரமடைவார். சனிபகவானின் ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரமடைந்து ஒன்பதாம் வீட்டிற்குச் சூரிய பகவான் வரும்போது வக்ர நிவர்த்தி அடைவார் சனி பகவான்.

ஜூன் 17ஆம் தேதி அன்று வக்ரமடைந்த சனி பகவான், நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சனிபகவானின் வக்ர காலம் என்பதால் இந்த மூன்று ராசிகளுக்கு பணமழை மற்றும் ராஜயோகம் அடிக்கப் போகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

சனி பகவானின் வக்ர காலம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்தால் அதிக வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. பெற்றோர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். நிலுவையில் உள்ள பணம் உங்களைத் தேடி வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

சிம்ம ராசி

சனி வக்ரப் பெயர்ச்சி காலத்தில் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பளம் உயர்வு மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை அனைத்தும் உண்டாகும். மன அழுத்தம் குறைந்து அமைதியான சூழ்நிலை உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

மகர ராசி

உங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எதிர்பாராத நேரத்தில் திடீர் பண வரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொருளாதாரம் முன்னேற்றத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மகர ராசிக்கு இது ஒரு புதிய மாற்றமாக இருக்கும் என ஆன்மீகம் கூறுகிறது.

(பொறுப்புத்துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணரை அணுகித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி