தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu And Ketu: ராகு கேது யோகத்தை அப்படியே அள்ளப் போகும் ராசிகள்

Rahu and Ketu: ராகு கேது யோகத்தை அப்படியே அள்ளப் போகும் ராசிகள்

Feb 18, 2024, 12:28 PM IST

ராகு மற்றும் கேது பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
ராகு மற்றும் கேது பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

ராகு மற்றும் கேது பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். தனக்கென சொந்த ராசிகள் இல்லாதவர்கள் ராகு மற்றும் கேது.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

சனிபகவானுக்கு பிறகு இவர்கள் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராஜபகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் நுழைந்தனர்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கின்றனர். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

ராகு கேது உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல யோகத்தை தருகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முயற்சிகள் கைகூடும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். ராகு வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

மிதுன ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு ஒவ்வொரு முயற்சியையும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ராகு மற்றும் கேது பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றனர். மறைமுகமாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். காலபைரவரை வழிபட்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி