தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Varalakshami Viratham 2023: வரலட்சுமி விரத நாளில் செய்ய வேண்டிய பாதர்த்தங்கள் இவை தான்! எளிய வழிபாடு செய்யும் முறை

Varalakshami Viratham 2023: வரலட்சுமி விரத நாளில் செய்ய வேண்டிய பாதர்த்தங்கள் இவை தான்! எளிய வழிபாடு செய்யும் முறை

Aug 24, 2023, 12:20 PM IST

வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் அந்த நாளில் லட்சுமி கடவுளருக்கு படைக்க வேண்டிய பதார்த்தங்களும், எளிய முறையில் வழிபாடு செய்யும் முறையும் பற்றி பார்க்கலாம்.
வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் அந்த நாளில் லட்சுமி கடவுளருக்கு படைக்க வேண்டிய பதார்த்தங்களும், எளிய முறையில் வழிபாடு செய்யும் முறையும் பற்றி பார்க்கலாம்.

வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் அந்த நாளில் லட்சுமி கடவுளருக்கு படைக்க வேண்டிய பதார்த்தங்களும், எளிய முறையில் வழிபாடு செய்யும் முறையும் பற்றி பார்க்கலாம்.

லட்சுமி கடவுளின் அருளை பெறுவதற்கான வழிபாடாக வரலட்சுமி விரதம் உள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளி கிழமை அன்று வரலட்சுமி விரதமான கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் நாளை கொண்டாடப்பட உள்ளது.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

கேட்ட வரங்கள் மட்டுமல்லாமல், கேட்காத வரங்களையும் கொடுப்பாள் அன்னை வரலட்சுமி என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருந்து வருகிறது. பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்க, தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றை பெறவும் வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள்.

வரலட்சுமி விரதம் இருந்து மாலையில் பூஜை செய்யும் போது அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களை விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும். வரலட்சுமி விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அந்த பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கும் சிறப்பு வந்து சேரும்.

வரலட்சுமி விரதம் நாளில் நோன்பு பாதர்த்தங்களாக பச்சை அரிசி இட்லி, பருப்பு சேர்த்த குழம்பு, ரசம், கறிவகைகள், வடை, சர்க்கரை பொங்கல். பாசிபருப்பு பாயசம், தேங்காய், பச்சைமிளகாய் உப்பு சேர்த்த பச்சடி, கார கொழுக்கடை நைவேத்திய செய்வதற்கு முன்பு படைக்க வேண்டும். இதில் எண்ணிக்கையில் வரும் பதாத்தங்களான இட்லி, கொழுக்கட்டை, வடை போன்றவற்றை 9 என எண்ணிக்கையுடன் படைக்க வேண்டும்.

இதுதவிர லட்சுமி கடவுளுக்கு மிகவும் பிடித்த பதார்த்தமாக இருந்து வரும் கோசம்பரி தயார் செய்து படையாலாக படைக்கலாம். கடலை பருப்பை ஊற வைத்து அதில் தண்ணீரை நீக்க, ஏலக்காய்த் தூள், சர்க்கரை அல்லது வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கி வைத்து கோசம்பரி தயார் செய்யலாம்.

கோசம்பரியை காரமாகவும் செய்யலாம். அதற்கு பச்சை பயிறை ஊறவைத்து தண்ணீரை நீக்கி, கேரட், வெள்ளரி, மாங்காய், சிறிய அளவில் பச்சை மிளகாய், உப்பு கலந்து கார கோசம்பரியை தயார் செய்து விடலாம்.

வரலட்சுமி வழிபாடு

எளிமையான முறையில் வரலட்சுமி வழிபாடு செய்ய, ஐந்து வகையான பழங்கள், ஐந்து வகை மலர்கள் ஆகியவற்றி லட்சுமி கடவுள் முன் சமர்ப்பித்து, லட்சுமி தேவியின் துதிப்பாடலை பாடி வழிபடலாம்.

ஐந்து வகையான பழங்களில் வாழைப்பழம், கொய்யா, மாதுளை ஆகியவற்றுடன் வேறு இரு பழங்களை சேர்த்து கொள்ளலாம். அதேபோல் பூக்களில் தாழம்பூ, செம்பருத்தி, முல்லை, மாதுளம்பூ, தாமரை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி