தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran Karma: ‘திருவாதிரை, சித்திரை, திருவோணம் நட்சத்திரமா? சுக்கிரன் கர்மா கவனம் தேவை!

Sukran Karma: ‘திருவாதிரை, சித்திரை, திருவோணம் நட்சத்திரமா? சுக்கிரன் கர்மா கவனம் தேவை!

Aug 02, 2023, 10:59 AM IST

‘திருமணம் தொடர்பான சின்ன சின்ன உதவிகள் கூட நீங்கள் செய்தீர்கள் என்றால் அது தான் உங்களுக்கு சுக்கிரன் கர்மா பாதிப்புகளை நிவர்த்தி செய்கிறது’
‘திருமணம் தொடர்பான சின்ன சின்ன உதவிகள் கூட நீங்கள் செய்தீர்கள் என்றால் அது தான் உங்களுக்கு சுக்கிரன் கர்மா பாதிப்புகளை நிவர்த்தி செய்கிறது’

‘திருமணம் தொடர்பான சின்ன சின்ன உதவிகள் கூட நீங்கள் செய்தீர்கள் என்றால் அது தான் உங்களுக்கு சுக்கிரன் கர்மா பாதிப்புகளை நிவர்த்தி செய்கிறது’

சுக்கிரன் கர்மா கொண்ட நட்சத்திரங்கள் என்று பார்த்தால், திருவாதிரை, சித்திரை, திருவோணம் நட்சத்திரங்கள் தான். இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்து, சுக்கிரனனின் கர்மபதியை வாங்கிய இந்த நட்சத்திரக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களின் பரிகாரம் அல்லது தீர்வு என்ன என்பதை பார்க்கலாம். 

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

திருமணம் ஆகாமல் , வரன் கிடைக்காமல் திண்டாடுபவர்கள், திருமண செலவு செய்ய முடியாமல் தவிப்பவர்கள், திருமணம் தொடர்பான தடை அல்லது பிரச்னை, சிக்கலில் இருப்பவர்கள் யாராவது உங்களுக்கு தெரிந்து இருந்தால், அவர்களுக்கு நீங்கள் உதவுவது உங்களுக்கு பெரிய பலன்களை தரும். 

திருமணம் தொடர்பான சின்ன சின்ன உதவிகள் கூட நீங்கள் செய்தீர்கள் என்றால் அது தான் உங்களுக்கு சுக்கிரன் கர்மா பாதிப்புகளை நிவர்த்தி செய்கிறது. அதை விட சிறந்த பரிகாரம், பெண்களுக்கு உதவி செய்வது. 

குறிப்பாக, திருமணம் ஆகாத பெண்கள். படிப்பு, பணி, நிதி தொடர்பான எந்த உதவியாக இருந்தாலும் இளம் பெண்களுக்கு செய்யும் போது அது திருவாதிரை, சித்திரை, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களை தரும். 

ரிஷப ராசி, ரிஷப லக்னம், துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் தான் திருவாதிரை, சித்திரை, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஹீரோ, வில்லன், துரோகி எல்லாமே. பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்கள் சுக்ரனின் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரக்காரர்களிடம் திருவாதிரை, சித்திரை, திருவோணம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

உறவுகளில் அத்தை வழி உறவுகளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். தந்தை வழி உடன் பிறந்த அல்லது தந்தை வழி அத்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் மூலம் நன்மைகளும் வரலாம், தீமைகளும் வரலாம். இரண்டில் எதைப் பெறப்போகிறோம் என்பது திருவாதிரை, சித்திரை, திருவோணம் நட்சத்திரக்காரர்கள் கைகளில் தான் உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி