தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  North Korea Unveils Radioactive Tsunami Weapon; Can Annihilate Enemy Ships Without Detection

North Korea: கதிரியக்க சுனாமியை உருவாக்கும் ரகசிய ஆயுதம்! வட கொரியா பரிசோதனை

Mar 25, 2023 05:33 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 25, 2023 05:33 PM IST

Radioactive Tsunami weapon: ரகசிய ஆயுதம் ஆயுதம் ஒன்றை பரிசோதனை மேற்கொண்டிருப்பதாகவும்,அவை கதிரியக்க சுனாமியை உருவாக்கும் என வடகொரிய தெரிவித்துள்ளதால், கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பியோங்யாங் நகர நிர்வாகம், தெற்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் நீருக்கு அடியில் ஆளில்லா விமானம் மூலம் இந்த சோதனை செய்தது. இந்த சோதனையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் பார்வையிட்டார். இந்த ஆயுதம் எதிரிநாட்டு கப்பலை அவர் கண்டறியாதவாறு அழிக்கும் திறனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அமெரிக்கா - தென் கொரியா இடையே நடைபெற்று வரும் போர் பயிற்சிகளுக்கு மத்தியில், தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்தும் விதமாக இதுபோன்ற ஆயுதங்களின் பரிசோதனை கட்டாயமாகியுள்ள வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இதுபோன்ற மேலும் சில ஆயுதங்களின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வடகொரிய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் தென்கொரியாவின் சியோல் நகரில் இருநாடுகளின் மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் காரணமாக பியோங்யாங் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருகிறது.

More