தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Nilgiris: உருளைக்கிழங்கு மூட்டை தூக்கி வாக்கு கேட்ட நாம் தமிழர் வேட்பாளர்!

Nilgiris: உருளைக்கிழங்கு மூட்டை தூக்கி வாக்கு கேட்ட நாம் தமிழர் வேட்பாளர்!

Apr 16, 2024 07:57 PM IST Pandeeswari Gurusamy
Apr 16, 2024 07:57 PM IST
  • Nilgiris: நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக விவசாயி ஆ. ஜெயக்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளர் ஆ. ஜெயக்குமார் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார் .நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வேட்பாளர் ஆ. ஜெயக்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேட்பாளர் ஆ. ஜெயக்குமாரை ஆதரித்து உருளைக்கிழங்கு மண்டி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தல் மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ. ஜெயக்குமார் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிக்கு லாரியில் வந்த உருளைக் கிழங்கு மூட்டைகளை பாரம் தூக்கும் தொழிலாளர்களுடன் தொழிலாளராக தோளில் சுமந்து மண்டியில் மூட்டைகளை இறக்கி வைத்தார்.. உருளைக்கிழங்கு மண்டிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆண் பெண் தொழிலாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
More