தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul: ஆம்புலன்ஸை வழிமறித்த போதை ஆசாமி.. தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Dindigul: ஆம்புலன்ஸை வழிமறித்த போதை ஆசாமி.. தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Aarthi V HT Tamil
Apr 22, 2023 11:33 AM IST

108 ஆம்புலன்ஸ், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை வழிமறித்து கலாட்டாவில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆம்புலன்ஸை வழிமறித்த போதை ஆசாமி
ஆம்புலன்ஸை வழிமறித்த போதை ஆசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே நேற்று மதியம் நிற்க முடியாத அளவிற்க்கு உச்ச போதையில் இளைஞர் ஒருவர் தள்ளாடிய நிலையில் சாலையில் அங்கும், இங்கும் நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ், பேருந்துகள் நூற்பாலை வாகனங்கள், இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டார். அத்துடன் நடந்து செல்லும் பெண்கள் இளைஞர்களிடமும் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இளைஞர் பேருந்து நிலையத்திற்குள் சென்று கலாட்டாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இளைஞர்கள் அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் முதியவர் ஒருவர் மட்டும் தைரியமாக குடி போதையில் கலாட்டாவில் ஈடுபட்ட இளைஞரை துணிந்து பிடித்தார். பின்னர் சுற்றி இருந்த அனைவரும் அவனை பிடித்து காவல் துறையினர் ஒப்படைத்தனர். அவனை பிடிக்க முயன்ற போது தகாத வார்த்தை பயன்படுத்தியதால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

காவல் துறையினரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த இளைஞர் வாகனம் செல்லும் போதும் கூட திரும்பி டேய் என்று சவுண்ட் விட ஆத்திரமடைந்த பொ துமக்கள் கண்மூடித்தனமாக இளைஞரை சரமாரியாக தாக்கினர்.

காவல் துறையினரின் விசாரணையில் அவர் தாராபுரத்தை சேர்ந்த ராஜா (19) என்பதும் வேலை செய்விட்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளதும் தெரியவந்தது. போதையில் இருப்பதால் ராஜாவை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் குடி போதை இளைஞர்களின் அட்டூழியத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்க அவதிக்குள்ளாகினர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்