தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  India பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.. கோவையை மிரட்டும் பிரம்மாண்ட போஸ்டர்கள்!

INDIA பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.. கோவையை மிரட்டும் பிரம்மாண்ட போஸ்டர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 20, 2023 11:04 AM IST

"2024 திராவிட மாடலின் INDIA. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல..." என்ற வாசகங்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், பாஜக கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், தொடர்ந்து பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. Indian National Democratic Inclusive Alliance- இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்பதை INDIA என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவையில் திமுக இளைஞரணியினர் INDIA குறித்து 20 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் "2024 திராவிட மாடலின் INDIA. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல..." என்ற வாசகங்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் கோவை லங்கா கார்னர், ரேஸ் கோர்ஸ், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

ஏற்கெனவே காங்கிரஸ் தலைமையில் இருந்த பழைய கூட்டணியின் பெயரான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) என்பதற்கு பதில் புதிய பெயரை வைப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து பரிதுரை செய்யப்பட்ட இந்தியா (I.N.D.I.A - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் கூட்டணிக்கு பெயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக இந்தியா ஒருங்கிணைந்து உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இக்கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடத்தவும் 'இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீகாரிலும் இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவது கூட்டத்தை பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடத்த முடிவு செய்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்