தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Keeladi Excavations: கீழடி அகழாய்வில் பழங்கால எடை கல் கண்டெடுப்பு

Keeladi Excavations: கீழடி அகழாய்வில் பழங்கால எடை கல் கண்டெடுப்பு

Karthikeyan S HT Tamil
Aug 08, 2023 11:14 AM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழங்கால எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பழங்கால எடை கல்
பழங்கால எடை கல்

ட்ரெண்டிங் செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வுப் பணியின் போது பல்வேறு பழங்கால பொருட்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பளபளப்பான மேற்பரப்புடன் கூடிய எடை கல், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகளும் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் 175 செ.மீ. ஆழத்தில் XM19/3 என்ற

அகழாய்வுக் குழியிலிருந்து படிக கல்லால் செய்யப்பட்ட எனட கல் ஒன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது. இவ்வெடைக்கல் சற்று கோள வடிவில், மேற்பகுதி மற்றும் அடி பகுதி தட்டையாக்கப்பட்டு, பளபளப்பான மேற்பரப்புடன் ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது.

இக்கல் 2 செ.மீ.விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் 8 கிராம் எனட கொண்டுள்ளது. இந்த எனடக்கல்லுடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்பு பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கீழடியில் நடைபெற்ற 5-ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட அகழாய்வு குழி அருகே இரும்பு உலை அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அகழாய்வு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அதன் கீழ் பகுதி தட்டையாக இருந்தது. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டிருந்தன.

கீழடி அகழாய்வு பகுதி முன்பு தொழில் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருட்களில் இருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள், எடைகற்கள் ஆகியவை, அங்கு ஏற்கனவே தொழில்கள் நடந்ததை உறுதிபடுத்தும் ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையில், தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்