தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாண்புமிகு அமைச்சரே! பொள்ளாச்சி ஜெயராமனை கலாய்த்துவிட்ட துரைமுருகன்!

மாண்புமிகு அமைச்சரே! பொள்ளாச்சி ஜெயராமனை கலாய்த்துவிட்ட துரைமுருகன்!

Kathiravan V HT Tamil
Apr 10, 2023 10:48 AM IST

அங்குள்ள தண்ணீர் ஒரு சொட்டு கூட வீணாக கூடாது என்று சொன்ன ஜெயராமன் சொன்னதை வரவேற்கிறேன். சட்டபேரவை முடிந்த பிறகு ஒரு குழுவை இஸ்ரேலுக்கு அனுப்பி அதை செய்யும் எண்ணமும் எனக்கு உண்டு என அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

முதன்முதலாக இத்திட்டத்தை நிறைவேற்ற கேரள முதலமைச்சரை தொடர்பு கொண்டு வாய்ப்பை உருவாக்கி 25-09-2019 அன்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் எங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் பல பேச்சுவார்த்தைகள் இரு அரசுகளுக்கும் இடையே நடந்த நிலையில் தேர்தல் வந்ததால் நிறைவேற்ற முடியவில்லை.

இப்போதுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காலத்தில் இப்பிரச்னையை பேசினால்தான் இது முடியும். இரு மாநிலங்களும் சகோதர மாநிலங்கள் என்ற மனப்பான்மை உடையவர்.

இதில் தீவிர கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இது கேள்வி நேரம் ஜாடை மாடையாக கூட குற்றம் சொல்லக் கூடாது. முன்னாள் முதலமைச்சர் இதில் முனைப்பு காட்டினார் என்று சொல்வதில் தவறு இல்லை; ஆனால் அவர்தான் காட்டினார் என்று சொல்வதுதான் ஒரு மாதிரி.

இத்திட்டத்திற்கு முதல் பேச்சு தொடங்கியவனே துரைமுருகன்தான். 1989ஆம் ஆண்டில் நான் தான் முதல் முறையாக பேச போனேன்.

இதுவரை கேரள அரசுடன் 28 முறை பேசி உள்ளோம். ஆணைமலை ஆறில் நாங்கள்தான் அணைக்கட்டி தண்ணீரை கொடுப்போம் என்பதில் கேரள அரசு உறுதியாக இருந்தனர். ஆனால் தற்போது நீங்களே அணையை கட்டிக் கொள்ள சொல்லிவிட்டார்கள்.

கேரள முதலமைச்சர் அவர்கள் நியாயமாக இருக்க கூடிவர். சட்டமன்றம் முடிந்த பிறகு முதலமைச்சர் அளவில் பேசி இப்பிரச்னைக்கு முடிவுக்கட்ட வேண்டும் என்று நான் நினைத்துள்ளேன் என்றார்.

தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன்: சென்ற ஓராண்டில் மட்டும் பரம்பிக்குளம் அணையில் இருந்து 15 டிஎம்சி, சோலையாறில் இருந்து 5 டிஎம்சி, ஆழியாறு அணையில் இருந்து 10 டிஎம்சி தண்ணீரும் வீணாக அரபிக்கடலில் கலந்துள்ளது.

இந்த தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைவதற்குள் 30 டிஎம்சி தண்ணீர் வீணாகிவிடுகிறது. மேல்நிராறில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து நல்லாறு அணை அமைத்தால் 7.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திற்கு டேம் டு ரூட் என்ற இஸ்ரேல் பாசனம் மூலம் தண்னீர் கொண்டு செல்லப்படுமா? என்றார்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில் மாண்புமிகு அமைச்சர் பொள்ளாச்சிக்காரர் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு “அவர் அமைச்சர் இல்லை இப்போ உறுப்பினர்” என்றார்.

’’இருக்க வேண்டிவர் சார் அவரு...! He was a knowledgeable and senior man; அவருக்கு அவர்கள் ஆட்சியில் அமைச்சர் கொடுக்காததால் வருத்தப்படுகிறேன்’’ என்று துரைமுருகன் சொல்ல பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அங்குள்ள தண்ணீர் ஒரு சொட்டு கூட வீணாக கூடாது என்று சொன்ன ஜெயராமன் சொன்னதை வரவேற்கிறேன். சட்டபேரவை முடிந்த பிறகு ஒரு குழுவை இஸ்ரேலுக்கு அனுப்பி அதை செய்யும் எண்ணமும் எனக்கு உண்டு என அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்