தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vegetable Price Hike: இப்படியே போனா சாப்பிடுறதா இல்லையா.. கதறும் இல்லத்தரசிகள்..!

Vegetable Price Hike: இப்படியே போனா சாப்பிடுறதா இல்லையா.. கதறும் இல்லத்தரசிகள்..!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 05, 2023 11:03 AM IST

ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு சவாலாக உள்ள நிலை நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கூட விலை உயர்ந்துள்ளது பெரும் சவாலாக உருவெடுக்கும் சூழல் உள்ளது.

கோப்புப்படம் (Photo by Noah SEELAM / AFP)
கோப்புப்படம் (Photo by Noah SEELAM / AFP) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த சில நாட்களாக தக்காளி விலை கோயம்பேடு சந்தையிலேயே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் உள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி மீண்டும் விலை ரூ.20 உயர்ந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் கடந்த 12 நாட்களில் விலை ரூ.70 உயர்ந்துள்ளது.

அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. தரத்திற்கேற்ப தக்காளியில் விலையில் சிறிய மாறுபாடு உள்ளது.

அதேசமயம் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ110, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.40 பச்சை மிளகாய் ரூ.80, உருளை ரூ.55, சின்ன வெங்காயம் ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ இஞ்சி ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிலோ இஞ்சி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. இதில் காய்கறிகளின் தரத்திற்கு ஏற்ப சற்று ஏற்ற இறக்கத்துடன் விலையை வியாபாரிகள் நிர்ணயிக்கின்றனர். மொத்த காய்கறி விற்பனை நிலவரமே இது என்றார் தமிழகம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் மேலும் விலை அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ,180க்கும், சிறுபருப்பு ரூ,130க்கும், உருட்டு உளுந்து ரூ,130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வரத்து குறைந்தால் பொருட்களின் விலை நிலவரம் மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இப்படி வீடுகளில் அன்றாடம் காலை முதல் மாலை வரை சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் விலை அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கேஸ் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குழந்தைகளின் கல்விக்கட்டணம் என பல நெருக்கடியில் உள்ள குடும்பங்களில் தற்போது ஏற்பட்டுள்ள காய்கறி விலை உயர்வு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது தக்காளி விலை உயர்வை சமாளிக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அது சென்னையில் மட்டும் தான். இந்த திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் என இல்லத்தரசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு சவாலாக உள்ள நிலை நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கூட விலை உயர்ந்துள்ளது பெரும் சவாலாக உருவெடுக்கும் சூழல் உள்ளது.

இந்த நிலையில் இப்படியே விலை உயர்ந்து கொண்டே போனால் சாப்பிடுறதா இல்லையா என இல்லத்தரசிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்