தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi Stalin : முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin : முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்!

Divya Sekar HT Tamil
Nov 27, 2022 12:49 PM IST

உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் ஆசிபெற்றார்.

முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்
முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்காவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

அந்த புகைப்படத்தை வெளியிட்டு, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பேரறிஞர் வழியில் மாநில உரிமை காக்க போராடும் முதலமைச்சர்களில் முதல்வர், முத்தமிழறிஞர் வழியில் சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பெற்றேன். திமுக தலைவர் அவர்களின் வழியில் மாநில-கழக வளர்ச்சிக்காக உழைப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர், சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களிலும், பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்