தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kovakkai Gravy:நாக்கில் எச்சில் ஊற வைக்கும் கோவக்காய் கிரேவியை இப்படி செஞ்சு பாருங்க!

Kovakkai Gravy:நாக்கில் எச்சில் ஊற வைக்கும் கோவக்காய் கிரேவியை இப்படி செஞ்சு பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 29, 2023 10:56 AM IST

கோவைக்காய் கிரேவி தோசை, சப்பாத்தி , சுடு சாதம் போன்றவற்றிக்கு அட்டகாசமான சுவையை தரும்.

கோவைக்காய் கிரேவி
கோவைக்காய் கிரேவி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கோவக்காய்

நிலக்கடலை

தேங்காய்

கசகசா

மிளகு

சீரகம்

மல்லி

முந்திரி பருப்பு

பட்டை

ஏலக்காய்

கிராம்பு

பிரியாணி இலை

புளி

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி பூண்டு பேஸ்ட்

தக்காளி

மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

உப்பு

செய்முறை

நிலக்கடலை, தேங்காய், கசகசா, மிளகு, சீரகம், மல்லி, முந்திரி பருப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஆகிய பொருட்களை வாணலியில் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். வறுத்த இந்த மசாலா பொருட்களை ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுத்து அரைத்து கொள்ள வேண்டும் . பின்னர் சிறிது கெட்டியான புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கோவைக்காயை நன்றாக கழுவி விருப்பமான வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். சூடான வாணலியில் எண்ணெய் சேர்த்து கோவைக்காயை வதக்க வேண்டும். ஒரு பத்து நிமிடம் வரை எண்ணெய்யில் வதக்கிய கோவைக்காயை தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணெய்யில் இரண்டு பிரியாணி இலை சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டம். சீரகம் பொரிந்தவுடன் அதில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி சேர்த்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கி வரும் போது இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னன் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி வதங்கிய பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். ஸ்மில் வைத்து 5 நிமிடம் வதக்கிய பின் தேவையான மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் போது லேசாக வதக்கி வைத்த கோவைக்காயை சேர்க்க வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். குழம்பு தயாரானவுடன் லேசாக மிளகு தூள் சேர்த்து இறக்கி விடலாம். (தேவை என்றால் நன்றாக வதக்கி பொரியல் போல் வைத்து கொள்ளலாம்.) இந்த கிரேவி தோசை, சப்பாத்தி , சுடு சாதம் போன்றவற்றிக்கு அட்டகாசமான சுவையை தரும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்