தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Trb Raja: டிஆர்பி ராஜா எனும் நான்....! ராஜ்பவனில் அமைச்சராக பொறுப்பேற்றார் டிஆர்பி ராஜா

Minister TRB Raja: டிஆர்பி ராஜா எனும் நான்....! ராஜ்பவனில் அமைச்சராக பொறுப்பேற்றார் டிஆர்பி ராஜா

Kathiravan V HT Tamil
May 11, 2023 10:37 AM IST

டிஆர்பி ராஜாவுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அமைச்சராக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜா
அமைச்சராக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டிஆர்பி ராஜாவுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை செய்து வைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி
டிஆர்பி ராஜாவுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை செய்து வைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி

மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜாவுக்கு பதவி பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். முன்னதாக பதவியேற்பு விழாவுக்கு வந்த ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

ஆளுநரை வரவேற்கும் முதலமைச்சர்
ஆளுநரை வரவேற்கும் முதலமைச்சர்

டிஆர்பி ராஜாவுக்கு தொழில், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை ஒதுக்கப்படும் என கூறப்படும் நிலையில் இலாகா ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம்’

பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்துள்ள டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர்
பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்துள்ள டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர்

தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் டிஆர்பி ராஜாவின் நியமனம் மூலம் இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

’மந்திரி ஆன அடுத்த வாரிசு’

திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகனுமான தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ராஜா எனும் டி.ஆர்.பி.ராஜா தற்போது மன்னார்குடி தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களிலும் மன்னார்குடி தொகுதியில் இருந்தே வெற்றி பெற்ற டிஆர்பி ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக உள்ளார்.

’வாக்காளர்கள் மனநிலையை ஆராய்வதில் முனைவர் பட்டம்’

1976ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்த டிஆர்பி ராஜா சென்னை சேத்துப்பட்டுவில் உள்ள எம்.சி.சி பள்ளியில் பயின்றவர்.

சென்னை லயோலா கல்லூரியில் இளநிலைபடிப்பும், சென்னை பக்லைக்கழகத்தில் உளவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றுள்ள டிஆர்பி ராஜா.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ’வாக்காளர்கள் மனநிலை’குறித்து ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

தற்போது வகிக்கும் பதவிகள்

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணைசபாநாயகர்களில் ஒருவராக உள்ள டிஆர்பி ராஜா, தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர், தமிழ்நாடு பொதுக்கணக்கு குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்