தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Training For Students: 8, 10, 12, ஐடிஐ படித்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

Training for students: 8, 10, 12, ஐடிஐ படித்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

Priyadarshini R HT Tamil
Feb 07, 2023 12:26 PM IST

உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருச்சியில் பிப்ரவரி 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளுமாறு 8, 10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் ஐடிஐ முடித்த மாணவர்கள், ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் 2018-19, 2019-20. 2020-21, 2021-22 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10,12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) அனைவரும் கலந்துகொள்ளலாம்,

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தொழில் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7000/-முதல் ரூ.10,000/-வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுதர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுதன் சான்றிதழல் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்