Top 10 News : விஜயை கடுமையாக சாடிய சீமான்.. கேரளாவில் 4 தமிழர்கள் பலி.. திருச்செந்தூருக்கு 6 லட்சம் பேர் வர வாய்ப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : விஜயை கடுமையாக சாடிய சீமான்.. கேரளாவில் 4 தமிழர்கள் பலி.. திருச்செந்தூருக்கு 6 லட்சம் பேர் வர வாய்ப்பு

Top 10 News : விஜயை கடுமையாக சாடிய சீமான்.. கேரளாவில் 4 தமிழர்கள் பலி.. திருச்செந்தூருக்கு 6 லட்சம் பேர் வர வாய்ப்பு

Marimuthu M HT Tamil
Nov 02, 2024 08:59 PM IST

Top 10 News : விஜயை கடுமையாக சாடிய சீமான்.. கேரளாவில் 4 தமிழர்கள் பலி.. திருச்செந்தூருக்கு 6 லட்சம் பேர் வர வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top 10 News : விஜயை கடுமையாக சாடிய சீமான்.. கேரளாவில் 4 தமிழர்கள் பலி.. திருச்செந்தூருக்கு 6 லட்சம் பேர் வர வாய்ப்பு
Top 10 News : விஜயை கடுமையாக சாடிய சீமான்.. கேரளாவில் 4 தமிழர்கள் பலி.. திருச்செந்தூருக்கு 6 லட்சம் பேர் வர வாய்ப்பு
  • ‘’தம்பி என்பது வேறு; கொள்கை என்பது வேறு, நீ கடவுளே ஆனாலும் நீ எதிரி தான்; ரத்த உறவைவிட கொள்கை உறவே பெரிது. திராவிடமும் தமிழ்த்தேசியமும் வேறுவேறு. விஜயின் மொழிக்கொள்கை தவறாகவுள்ளது. வில்லனும் ஹீரோவும் ஒன்றா? ரசிகர்கள் வேறு; கொள்கைப் போராளிகள் வேறு. கொள்கையை மாற்று அல்லது எழுதிக் கொடுத்தவர்களை மாற்று. என்னுடைய வாக்கு வங்கியை ஒன்றும் செய்யமுடியாது'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
  • விஜயை விமர்சித்து சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால், நாங்கள் மூளைக்குள் கொண்டுபோகவில்லை என த.வெ.க மாநாட்டில் கொள்கைகளை வாசித்த சம்பத் குமார் முகநூலில் பதிவு செய்துள்ளார். மேலும், மாநாட்டிற்கு முன்பு சீமான் பேசியதற்கும், மாநாட்டின் வெற்றிக்குப் பின் பேசிய பேச்சுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது என்றும், இப்படி பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் கூறினால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும் என்றும்; யாரை விமர்சனம் செய்யவேண்டும் யாரை கடந்துபோக வேண்டும் என்று தலைவர் விஜய் எங்களுக்கு உணர்த்தியுள்ளார் என்று சம்பத் குமார் பதிலளித்துள்ளார்.

சிறப்பு ரயில்கள்:

  • தீபாவளிப் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை(நவ.03) மதுரை மற்றும் திருச்சியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. நாளை மாலை 7:15 மணிக்கு மதுரையிலிருந்தும், இரவு 10:50 மணிக்கு திருச்சியிலிருந்தும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
  • கேரள மாநிலம், சொர்ணூர் பகுதியில் ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்தபோது ரயில் மோதிய விபத்தில், தமிழ்நாட்டைச் சார்ந்த துப்புரவுப் பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ரயில் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட துப்புரவுப் பணியாளரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
  • தீபாவளி தொடர்விடுமுறையை ஒட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க 3 நாட்களில் 25ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாகப் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • கேரளாவில் மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாசார நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய சிறப்புரையில், ‘’ இந்தியாவில் தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்களாக திகழ்கின்றன. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்" என்றார்.

தேமுதிக கூட்டம்:

  • ஈரோடு மாநகராட்சியில் பெய்து வரும் கனமழையால் பெரியார் பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்தும் கழிவு நீர் ஆர்ப்பரித்து வெளியேறி வருகிறது. மேலும், மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் சாலையில் பெருக்கெடுத்துச்சென்றதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும்சிரமத்திற்கு ஆளாகினர்.
  • தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பர் 10ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டமானது, பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் கூட்டம் நடைபெறவுள்ளது.
  • ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று விஜய் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது என்றும்; ஆட்சிக்கு வரும்முன்பே கூறுவது ஆணவத்தைக் காட்டுகிறது என்றும்; ஆட்சிக்கு வர களப்பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தனது நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் பேட்டியளித்தார்.
  • திருச்செந்தூரில் சூரசம்கார நிகழ்வுக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பிடம், கழிப்பிட வசதி, மருத்துவம் - சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். மேலும், 2ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் எனவும், திருச்செந்தூரில் கந்த சஷ்டி முடிந்தபிறகு சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.