தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை..Technical Fault..மைக் வேலை செய்யவில்லை! உதயநிதி விளக்கம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை..Technical Fault..மைக் வேலை செய்யவில்லை! உதயநிதி விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை..Technical Fault..மைக் வேலை செய்யவில்லை! உதயநிதி விளக்கம்

Published Oct 26, 2024 02:26 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 26, 2024 02:26 PM IST

  • சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் திட்டங்கள் வளர்ச்சித் துறையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் முழுமை பெறாமல் சிறு தடங்கல்கள் ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம் இதுகுறித்து கேட்டபோது,"தமிழ்தாய் பாடும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது எனவும், மைக் சரியாக வேலை செய்யாததால் பாடல் பாடியவர்களின் குரல் கேட்கவில்லை என கூறினார். தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அனைவரும் கேட்கும்படி பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது என்றார்.

More